அமர்க்களமாக ரிலீசானது ஆரம்பம்.. பல ஊர்களில் காலைக் காட்சிகள், அதிகாலையில்!!
சென்னை: அஜீத் நடித்த ஆரம்பம் படம், அறிவித்தபடி தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே உலகெங்கும் வெளியானது.
பட வெளியீட்டை அஜீத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல ஊர்களில் சிறப்புக் காட்சி அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் - நயன்தாரா, ஆர்யா - டாப்சி ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பம்.
(ஆரம்பம்)
இந்தப் படம் என்ன கதை, என்ன மாதிரியான படம் என்றெல்லாம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத நிலையில் படம் வெளியானது.

அதிக அரங்குகள்
வெளிநாடுகளில் மிக அதிக அளவு அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. அஜீத் படங்களில் அதிக வெளிநாட்டு அரங்குகளில் வெளியான படம் என்ற பெருமை ஆரம்பத்துக்குக் கிடைத்திருக்கிறது.

அதிகாலையில்
சென்னையில் 30 அரங்குகளில் வெளியாகியுள்ளது இந்தப் படத்தின் முதல் காட்சி, அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது.

மதுரையில்...
மதுரை போன்ற நகரங்களில் இரவெல்லாம் காத்திருந்து சிறப்புக் காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகள் வாங்கியதைப் பார்க்க முடிந்தது.

நேற்று மாலையே
வெளிநாடுகளில் நேற்று மாலையே இந்தப் படம் வெளியாகிவிட்டது. அதுகுறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மாயாஜாலில்...
சென்னை புறநகரில் உள்ள மாயாஜாலில் மட்டும் இந்தப் படம் 90க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படுகின்றன.

ஒரு வாரத்துக்கு
ஒரு வாரத்துக்கு மேல் ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், ஆரம்பம் படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர்காரர்களின் பெட்டியை நிறைக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











