மகன் திருமணம்.. பிரபலங்கள் வருகை.. ஹோட்டல் வாடகை இவ்வளவா?.. நெப்போலியனின் ஏற்பாடுகள் என்ன தெரியுமா?
சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் நாளை களைகட்ட இருக்கிறது. திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ் திரையுலக பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு நெப்போலியன் மிகச்சிறந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் செய்திருக்கும் ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதனையடுத்து தனுஷுக்கு திருமண ஏற்பாடுகளை செய்த அவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை பார்த்திருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் தமிழ்நாட்டில் நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வரமுடியாத சூழலால் அவர் வீடியோ காலில் தனது நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார். பிறகு திருமணத்தை ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஜப்பானில் நாளை திருமணம்: அதன்படி கப்பலில் ஒருவார காலம் அமெரிக்காவிலிருந்து பயணத்தை ஆரம்பித்து ஜப்பான் சென்றடைந்தது நெப்போலியன் குடும்பம். அங்கு திருமணத்துக்கான வேலைகளை மும்முரமாக செய்தார்கள். நாளை பிரமாண்டமாக திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே தனது திருமணத்தை விமர்சித்த சிலருக்கு தனுஷ் தரமான பதிலடி கொடுத்து அனைவரையும் வாயடைக்க வைத்தார். நெப்போலியனும் உருக்கமாக சில விஷயங்களை பேசியிருந்தார்.
படையெடுத்த பிரபலங்கள்: நெப்போலியனின் மகன் திருமணத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த யார் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அதன்படி குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், பாண்டியராஜன், சரத்குமார், கார்த்தி என பெரும் நட்சத்திர பட்டாளமே ஜப்பானில் குழுமியிருக்கிறது. மேலும் பல பிரபலங்கள் ஜப்பான் சென்று திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு வந்தவர்களை நெப்போலியன் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.
நெப்போலியனின் ஏற்பாடுகள்: தனது மகன் திருமணத்துக்காக இவ்வளவு தூரம் பயணித்து வந்தவர்களின் மனம் நோகாதபடி ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்திருக்கிறார். அதன்படி வந்தவர்கள் தங்குவதற்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சிட்டியில் அமைந்திருக்கும் ஹில்டன் என்ற ஹோட்டலில் அறை எடுத்துக்கொடுத்திருக்கிறார். அந்த அறையின் ஒரு இரவுக்கான வாடகை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50,000 ரூபாய்க்கும் மேல் வரும் என கூறப்படுகிறது. அப்படி அவர் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட அறைகளை புக் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த அறையில் சகல வசதிகளும் இருக்கின்றன.
என்னென்ன வசதிகள்: அதாவது ப்ரீமியம் பிரிவில் அந்த அறை புக் செய்யப்பட்டிருக்கிறது. மேக்கப் போட்டுக்கொள்வதற்கு என்று ஒரு அறை, மாஸ்டர் பெட் ரூம் ஒன்று, நல்ல வியூ பாயிண்ட்டோடு சேர்ந்த பால்கனி, மேக்கப் கிட்டுகளை வசதியாக வைத்துக்கொள்வதற்கு ஒரு டேபிள், மேலும் அறைக்குள் இன்னொரு அறை என பல வசதிகள் இருக்கின்றன. மேலும், ஹோட்டலுக்கு அருகேயே ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக ஒரு மால், விதவிதமான உணவுகளை சாப்பிடுவதற்கு ரெஸ்டாரண்ட் என்று சக்கைப்போடு போடுகிறது ஹோட்டல் அமைந்திருக்கும் லொக்கேஷன். திருமணத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவிருக்கும் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனல் கலா மாஸ்டர் தங்கியிருக்கும் அறைக்கு ரூம் டூர் அடித்தபோது இந்த வசதிகள் குறித்து தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி ஹோட்டலிலிருந்து மகன் திருமணம் நடக்கும் ஹாலுக்கு வருவதற்கு தனித்தனி வாகனங்களையும் நெப்போலியன் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஃபோட்டோஷூட்: முன்னதாக திருமண நிகழ்வில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர்தான் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார். ரிகர்சல் செய்வதற்கு ஏதுவாக விசாலமான அறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தனுஷும், அக்ஷயாவும் தங்களது திருமணத்தையொட்டி நேற்று ஒரு ஃபோட்டோஷூட் வைத்துக்கொண்டனர். அதில் இருவரும் செம க்யூட்டாக இருந்ததை பார்த்து ரசிகர்கள் அவர்களுக்கு இங்கிருந்தே வாழ்த்து மழையை தூவ ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











