தற்கொலை வழக்கு.. டிவி நடிகையை இன்னும் கைது செய்யாமல் பாதுகாப்பதா? நடவடிக்கை குழு ஆவேசம்!

By

சென்னை: இளம் பெண் தற்கொலை வழக்கில் டிவி நடிகையை கைது செய்யாமல் பாதுகாப்பதா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. வயது 24.

இவரும் அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் காதலித்து வந்தனர். இது இரண்டு பேர் குடும்பத்துக்கும் தெரிய வந்தபோது, திருமணத்துக்கு சம்மதித்தனர்.

காதலை முறித்தார்

காதலை முறித்தார்

கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்நிலையில், ஹாரிஸுக்கு வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை கேட்டு வந்துள்ளனர். சொத்து மற்றும் பண ஆசையில் மயங்கிய ஹாரிஸ், ராம்ஸியுடனான காதல் உறவை முறித்தார்.

ராஸ்மியின் காதலர்

ராஸ்மியின் காதலர்

பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த ராம்ஸி, கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், ராம்ஸியின் காதலர் ஹாரிஸை, தற்கொலைக்குத் தூண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சுமி பிரமோத்

லட்சுமி பிரமோத்

இந்த வழக்கில் போலீசார் மேலும் விசாரணையை தொடங்கினர். ஹாரிஸின் சகோதரர் மனைவி, லட்சுமி பிரமோத். இவர் பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை. ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இவரும் தற்கொலை செய்துகொண்ட ராம்ஸியும் நெருங்கிய தோழிகள். இருவரும் இணைந்து டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

இந்நிலையில், நடிகை லட்சுமி பிரமோத்திடமும் அவர் குடும்பத்தினரிடமும் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரித்த மறுநாளில் இருந்தே நடிகையும் அவர் குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். ஹாரிஸூடன் நெருக்கமாக இருந்த ராம்ஸி, கர்ப்பமாகி உள்ளார். அவரைக் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் லட்சுமி பிரமோத்.

போலி சான்றிதழ்

போலி சான்றிதழ்

இதற்காக, தனியார் மருத்துவமனை ஒன்றில் போலியான திருமண சான்றிதழை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாராம் நடிகை லட்சுமி பிரமோத். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாதுகாப்பதாக

பாதுகாப்பதாக

இதற்கிடையே 'ஜஸ்டிஸ் பார் ராம்ஸி' என்ற பெயரில் நடவடிக்கை குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், ராம்ஸியை தற்கொலைக்கு தூண்டிய நடிகை லட்சுமி புரமோத்தை கைது செய்யாமல் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X