பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது: ஜி.வி. பிரகாஷ், சித்தார்த்
Recommended Video

சென்னை: பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், சித்தார்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களை வைத்து 200 பெண்களை மடக்கி அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். 7 ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார் தெரிவித்த பெண்ணின் சகோதரரும் தாக்கப்பட்டிருக்கிறார். இதை பார்த்து பாதிக்கப்பட்ட பிற பெண்கள் எப்படி புகார் தெரிவிக்க முன் வருவார்கள்.
ஜி.வி. பிரகாஷ்
அந்த மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து..
#arrestpollachirapists என்று ட்வீட் செய்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
சித்தார்த்
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களால் நடிகர் சித்தார்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி கிடைத்தால் தான் அவர்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். சமூக வலைதளங்களை வைத்து பெண்களை மடக்குவது அதிகரித்து வருகிறது. அதில் இருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.
பயங்கரம்
பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு நீதி தேவை. அந்த வீடியோவை பார்த்தேன். ஏன் யாரும் இது குறித்து பேசவில்லை என்று தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
அச்சம்
இந்த நெட்டிசனின் பயம் நியாயமானதே. திரையுலக பிரபலங்கள் மட்டும் அல்ல சாதாரண மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











