சுஷாந்த் வழக்கில் தொடரும் மர்மம்.. ரியாவை கைது செய்யுங்கள்.. டிரென்ட்டாகும் ஹேஷ்டேக்! #ArrestRhea

சென்னை: சுஷாந்த் மரணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

பிரபல பாலிவுட் நடிகரனா சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து கிட்டதட்ட 2 மாதங்கள் ஆகவுள்ளன. ஆனால் இன்னமும் அவரது மரண விவகாரத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக நாள்தோறும் ஒரு திடுக் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் மரண வழக்கை கையிலெடுத்துள்ள சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளது.

சுஷாந்த் கணக்கில் இருந்து

சுஷாந்த் கணக்கில் இருந்து

ஏற்கனவே சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்திதான் காரணம் என சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சுஷாந்தின் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் ரியா சக்ரவர்த்தியின் கணக்குக்கு அனுப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வெளியிட்டனர்.

இன்று மீண்டும் ஆஜர்

இன்று மீண்டும் ஆஜர்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ரியா சக்ரவர்த்தி அமலாக்கத்துறையில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுஷாந்த் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார் நடிகை ரியா சக்ரவர்த்தி.

கிடுக்கிப்பிடி விசாரணை

கிடுக்கிப்பிடி விசாரணை

ரியா சக்ரவர்த்தி மட்டுமின்றி அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, அவரது தந்தை இந்திரஜித் சக்ரவர்த்தி உட்பட ரியாவின் குடும்பமே அமலாக்கத்துறையின்அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சுஷாந்துடனான தொடர்பு மற்றும் பண பரி வர்த்தனைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் குற்றச்சாட்டு

ரசிகர்கள் குற்றச்சாட்டு

ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு நடிகை ரியா சக்ரவர்த்தி, தனக்கு ஞாபகம் இல்லை என்றே பதில் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியா சக்ரவர்த்தி தான், சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என சுஷாந்தின் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நெருக்கமான போட்டோக்கள்

நெருக்கமான போட்டோக்கள்

தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் அவர் நெருக்கமாக இருந்ததே சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதோடு ரியா சக்ரவர்த்தி மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் பிரைவேட் போட்டோக்களையும் வைரலாக்கினர்.

தேசிய அளவில் ட்ரென்ட்டிங்

தேசிய அளவில் ட்ரென்ட்டிங்

இதனிடையே ரியா சக்ரவர்த்தியை கைது செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் #ArrestRhea என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரென்டிங்கில் உள்ள நிலையில், ரியா பல முன்னணி நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X