செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்! எந்நேரமும் கைதாகலாம்!
மும்பை: நடிகை அமிஷா படேலுக்கு ராஞ்சி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாலிவுட் நடிகையான அமிஷா படேல் தமிழில் விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவர் நடித்த வசியக்காரி வசியக்காரி பாடல் பெரும் பிரபலமானது.
தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வந்த அமிஷா படேல், தனது பிஸ்னஸ் பார்ட்னர் குணாலுடன் சேர்ந்து தேசி மேஜிக் என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

ரூ.3 கோடிக்கு செக்
கடந்த ஆண்டு வெளிவர வேண்டிய அந்த படம் வெளிவரவில்லை. இதனால் கடன் கொடுத்த தயாரிப்பாளர் அஜய் குமார், அமிஷா படேலிடம் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்துத் தருமாறு கோரியுள்ளார். அப்போது அமிஷா படேல் ரூ.3 கோடிக்கு செக் கொடுத்துள்ளார்.

பவுன்ஸ் ஆன செக்
ஆனால் அந்த செக் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சியான அஜய்குமார் போனில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு அமிஷா படேலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிகிறது.

கைது வாரண்ட்
இதையடுத்து ராஞ்சி நீதிமன்றத்தில் அமிஷா படேலுக்கு எதிராக அஜய்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிலும் அமிஷா படேல் சரியாக ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு ராஞ்சி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

எந்நேரமும் கைது
வாரண்டுடன் ராஞ்சி போலீஸார் மும்பை செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமிஷா படேல் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

சட்டப்படி எதிர்கொள்வேன்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அமிஷா படேல், சட்டப்படி இதை நான் எதிர்கொள்வேன் என்றும் சட்டத்தின் மீது மிகுந்த மரியதை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
போங்க வாழ்க்கைய பாருங்க
மேலும் இந்த விஷயம் தொடர்பாக அமைதியாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் எனது ரசிகர்கள் என் மீது காட்டும் அக்கறைக்காக இந்த ட்விட்டை பதிவு செய்கிறேன். இதன் மூலம் கவனத்தை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு எனது ஆலோசனை, போங்க.. போய் வாழ்க்கைய பாருங்க என்பதுதான். இவ்வாறு அமிஷா படேல் தனது டிவிட்டில் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











