ஆபாச ஜோக்.. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை கொச்சைப்படுத்திய பாலிவுட் நடிகர் #ArresteRandeepHooda

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பற்றி ஜாதிய ரீதியாக ஆபாச ஜோக் அடித்த த்ரோபேக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை ஷேர் செய்த நெட்டிசன்கள் ராதே நடிகர் ரந்தீப் ஹூடாவை கைது செய்ய வேண்டும் என #ArresteRandeepHooda என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

திடீரென பூதாகரமாக கிளம்பிய இந்த பிரச்சனை பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி உள்ளது.

ரந்தீப் ஹூடா

ரந்தீப் ஹூடா

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ராதே படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் ரந்தீப் ஹூடா. முன்னதாக தோர் பட நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான Extraction படத்திலும் நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகரான இவர் ரங் ரசியா, சரப்ஜித், சுல்தான், பாகி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆபாச ஜோக்

ஆபாச ஜோக்

பகுஜன் சமாஜ் தலைவரும் முன்னாள் உத்தர பிரதேசத்தின் முதல்வருமான மாயாவதி குறித்து ஆபாசமாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ரந்தீப் ஹூடா பேசிய 43 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை தற்போது நெட்டிசன்கள் ஷேர் செய்து ரந்தீப் ஹூடாவுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர்

தலித் தலைவரான மாயாவதி குறித்து ஆபாசமான ஜோக் அடித்து சிரித்த ரந்தீப் ஹூடாவின் அந்த வீடியோவை பார்த்த பாலிவுட் ரசிகர்களும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும் கொதித்து போயுள்ளனர். ஒரு முன்னாள் முதல்வர் மற்றும் தலித் பெண் குறித்து ரந்தீப் ஹூடா எப்படி இப்படி கீழ்த்தரமாக பேசலாம் என எதிர்ப்பு வெடித்துள்ளது.

கைது செய்யுங்க

கைது செய்யுங்க

மேலும், #ArresteRandeepHooda என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, ராதே நடிகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்படி பாலியல் ரீதியாக பேசும் நபர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், இனிமேல் அவரது படங்களை பார்க்காமல் பாலிவுட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட ட்வீட்கள் ட்விட்டரை கலங்கடித்து வருகின்றன.

9 ஆண்டுகள் கழித்து

9 ஆண்டுகள் கழித்து

கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ரந்தீப் ஹூடா இந்த ஆபாச ஜோக்கை பேசியுள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து அந்த வீடியோவை தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கும் நிலையில், ரந்தீப் ஹூடா பேசியுள்ள வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Read more about: randeep hooda arrest கைது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X