Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னையும் கைது பண்ணுங்க...சோஷியல் மீடியாவை பரபரப்பாக்கிய ஓவியா
சென்னை : விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியாவிற்கு , அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. கவர்ச்சிக்கு மாறியும் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாசிலும் தற்கொலை முயற்சி செய்து பரபரப்பை கிளப்பினார். இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி மட்டுமல்ல, ஓவியாவின் புகழும் உச்சிக்கு செ்ன்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒவியா ஆர்மி துவங்கும் அளவிற்கு ரசிகர் கூட்டம் பெருகியது.
அதற்கு பிறகும் அவர் நடித்த படங்கள் சர்ச்சையில் தான் முடிந்தன. படங்கள் மட்டுமல்ல அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்து பதிவிட்டு, சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். கோலிவுட்டின் கங்கனா என வர்ணிக்கும் அளவிற்கு சர்ச்சையாகி விட்டார் ஓவியா.

பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது கோ பேக் மோடி ஹாஷ்டேக் உருவாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதனால் பாஜக.,வினர் ஓவியா மீது போலீசில் புகார், கோர்ட்டில் வழக்கு என போடும் அளவிற்கு போயினர். அந்த விவகாரம் முடிவதற்குள் மற்றொரு ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.ஓவியா தனது லேட்டஸ்ட் ட்வீட்டில், இது டெமாகிரசியா அல்லது டெமோகிரேசியா என கேட்டதுடன் அரஸ்ட் மீ டூ என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்துள்ளார். இந்த அரஸ்ட் மீ டூ என்ற ஹாஷ்டாக், பிரதமர் மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்டதாகும். இதில் பிரதமரை கடுமையாக விமர்சித்தும், கேள்விகள் கேட்டும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹாஷ்டாக்கின் கீழ் தான் ஓவியாவும் ட்வீட் செய்துள்ளார்.
ஓவியாவின் இந்த பதிவு சர்ச்சை, பரபரப்பை கிளப்பியதுடன் வைரலாகவும் ஆகிய வருகிறது. இதுவரை 8700 க்கும் அதிகமானவர் இதை லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் ரீட்வீட் வேறு செய்து வருகிறார்கள். கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.