மாநில காங்கிரஸ் துணை தலைவியாகும் பிக் பாஸ் சர்ச்சை நடிகை

By Siva

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அர்ஷி கான் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறாராம்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை அர்ஷி கான். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறாராம். அதே பிக் பாஸ் 11 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகை ஷில்பா ஷிண்டே அண்மையில் தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்நிலையில் ஷில்பா வழியில் செல்கிறார் அர்ஷி கான்.

அர்ஷி

அர்ஷி

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் துணை தலைவர் பதவியை அளிப்பதாக கூறினார்கள். அதனால் தான் அரசியலுக்கு வர சம்மதித்தேன். மேலும் வெளிப்படையாக பேசும் இளம் மக்கள் கட்சிக்கு தேவைப்படுகிறது என்று அர்ஷி கான் தெரிவித்துள்ளார்.

அஃப்ரிதி

அஃப்ரிதி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிதியுடன் உறவு கொண்டதாக தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அர்ஷி கான். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அஃப்ரிதியை மெஹ்பூப் என்று அழைத்தார்.

கட்சி

கட்சி

விளம்பரம் தேட சர்ச்சையை கிளப்பும் அர்ஷி கானுக்கு துணை தலைவர் பதவியா?. இது எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தேவையா?. கட்சியை பற்றி பேச வைக்கிறேன் என்று ஏதாவது வில்லங்கமாக பேச மாட்டார் என்று என்ன நிச்சயம் என்று ஏற்கனவே குமுறல்கள் எழத் துவங்கிவிட்டன.

லோக்சபா

லோக்சபா

அர்ஷிக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஷில்பா ஷிண்டே லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் ஆர்மியை நம்பி களத்தில் குதிக்கிறாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் சர்ச்சை நடிகை அர்ஷி கான் வேறு காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X