ரஜினியுடன் பணியாற்றியது என் திரைவாழ்வின் உச்சம்!- மனம் திறக்கும் கலை இயக்குனர்!

By Shankar

லிங்கா படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் வாழ்நாளில் பசுமையானவை, மறக்க முடியாதவை என்கிறார் அப்படத்தின் கலை இயக்குநர் அமரன்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய படமான ரஜினியின் லிங்கா படத்துக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார் அமரன். இவரது குரு சாபு சிரில்தான் படத்தின் வடிவமைப்பாளர்.

Art director Amaran shares his Lingaa experience

தனது லிங்கா அனுபவங்களை அவர் இப்படிப் பகிர்ந்து கொண்டார்...

பத்து வருடங்களுக்கு பின் கே.எஸ்.ரவிக்குமாருடன் பணியாற்றி வருகிறேன். மிகுந்த பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பழகியது மறக்க முடியாதது. ரஜினிகாந்த் அவர்கள் மிகுந்த எளிமையுடன் நெருங்கிய நண்பரைப்போல் பழகினார். எனக்கு இந்த அரிய வாய்ப்பினை அளித்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்​ மற்றும் தயாரிப்பாளர் ராக்​லைன் வெங்கடேஷ்​ அவர்களுக்கும் இவை அனைத்திற்கும் காரணமான எனது குருநாதரும் லிங்கா படத்தின் புரொடக்‌ஷன் டிசைனருமான சாபுசிரிலுக்கும்​ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்​.​

"ஜித்தன்" படத்தின் மூலம்தான் கலை இயக்குனராக அறிமுகமானார் அமரன். அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின் தனியாக படம் இயக்கியபோது 'சித்திரம் பேசுதடி', ‘அஞ்சாதே', 'நந்தலாலா', 'யுத்தம் செய்' படங்களில் தொடர்ச்சியாக கலை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

"மிஷ்கின் அவர்கள் என் திரை வாழ்வில் மட்டுமின்றி சொந்த வாழ்விலும் மிகுந்த முக்கியமானவர். அதே நேரம் நான் எத்தனைப் படங்கள் செய்திருந்தாலும் என் சினிமா வாழ்வில் உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "லிங்கா" படத்தில் பணியாற்றியதையே நினைக்கிறேன்", என்கிறார் அமரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X