பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே மாரடைப்பால் உயிரிழந்த கலை இயக்குனர்

சென்னை: பிரபல கலை இயக்குனர் பாலா மாரடைப்பால் உயிரிழந்தார்.

திரைப்படம் மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உடல்நலக் குறைவால் மரணமடைவது அதிகரித்து வருகிறது.

Art Director Bala is no more

அதிக நேரம் பணியாற்றுதல், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ச்சியான வேலைப்பளுவால் படத்தொகுப்பாளர் கிஷோர் இளம் வயதில் இறந்தது நினைவிருக்கலாம்.

இப்போது வளர்ந்து வரும் கலை இயக்குனரான பாலா என்ற பால முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நெய்வேலியைச் சேர்ந்த பாலா சென்னையில் மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 29ஆம் தேதி தான் 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளே மாரடைப்பால் மரணித்துள்ளார் பாலா. அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு மற்றும் சில நடன நிகழ்ச்சிகளிலும் கலை இயக்குனராக பணியாற்றியவர் என சொல்லப்படுகிறது.

ஒரு சில திரைப்படங்களிலும், குறும்படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய கலை இயக்குனராக சினிமாவில் வர வேண்டும் என்று லட்சியத்தோடு செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

More from Filmibeat

Read more about: art director tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X