Milan: விவேகம் படத்துக்காக அஜித் பட்ட கஷ்டங்கள்.. மறைந்த கலை இயக்குநர் மிலனின் த்ரோபேக் பேட்டி!

சென்னை: நடிகர் அஜித்துடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த கலை இயக்குநர் மிலன் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜானுக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பில்லா, வீரம், வேதாளம், விவேகம் என அஜித் குமார் நடித்த பல படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக இருந்த மிலன் காலமானது நடிகர் அஜித்தையே மனதளவில் வேதனையில் ஆழ்த்தி, விடாமுயற்சி படப்பிடிப்பையே தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Art Director Milan talks about Ajith Kumar effort for Vivegam throw back video trending now

இந்நிலையில், விவேகம் படத்திற்காக நடிகர் அஜித் எந்தளவுக்கு கஷ்டப்பட்டு நடித்தார் என அந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய மிலன் பேசிய த்ரோபேக் பேட்டி வீடியோவை தற்போது அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மிலன் மரணம்: கலை இயக்குநர் சாபு சிரீலிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர், பல தமிழ் படங்களுக்கு கலை இயக்குநராக ஏகப்பட்ட செட்களை தத்ரூபமாக வடிவமைத்து ரசிகர்களை அந்த உலகத்திற்கே கொண்டு சென்ற கலை இயக்குநர் மிலன் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் பணிபுரிய அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த மிலன் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மிலன் த்ரோபேக் பேட்டி: தோட்டா தரணி, முத்துராஜ், கிரண் உள்ளிட்ட குறிப்பிட்ட சில கலை இயக்குநர்கள் தான் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையமாகி உள்ள நிலையில், மிலன் பற்றி பலரும் அறியாத நிலையில், அவர் அளித்த த்ரோபேக் பேட்டி ஒன்றை தற்போது அஜித் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அந்த பேட்டியில் விவேகம் படத்திற்காக நடிகர் அஜித் பட்ட கஷ்டங்களை பட்டியலிட்டு பேசியுள்ளார் மிலன்.

Art Director Milan talks about Ajith Kumar effort for Vivegam throw back video trending now

அஜித் பட்ட கஷ்டம்: சர்வதேச அளவிலான கதை விவேகம் என்றும் அதற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்து தினமும் ஜிம்மில் பல மணி நேரங்கள் சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஒர்க்கவுட் செய்ததை பார்த்து அதிர்ந்து போனேன். மேலும், அந்த மரத்தை தூக்கிட்டு ஓடுற காட்சியில, லைட் வெயிட்டான மரத்தை ரெடி பண்ணிக் கொடுத்தேன். என்ன வெயிட்டே இல்லை, நல்லா வெயிட்ட ஏத்துங்கனு சொன்னார். கூடுதலாக வெயிட்டை அந்த மரத்துக்குள் ஃபில் செய்து கொடுத்தேன். மூன்று முறை அதை தூக்கிக் கொண்டு உண்மையாகவே விழுந்து எழுந்தார்.

மேலும், மரத்தில் இருந்து கீழே விழும் காட்சியில் டூப் போட்டு எடுக்கக் கூடாது என ஆர்டர் போட்ட அஜித், அவரே நடித்து எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். உடம்பில் இத்தனை அறுவை சிகிச்சைகளை செய்த மனுஷனால் எப்படி தனது ரசிகர்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க முடிகிறது என்று வியந்தேன் என பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X