Leo movie: லியோ -கைதி க்ளைமேக்ஸ்.. என்ன ஒற்றுமை தெரியுமா.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் ஒரே வாரத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவரவுள்ளது.
இந்தப்படத்தின் ரிலீசுக்காக ப்ரீ புக்கிங்கிற்காக ரசிகர்கள் அதிகமான வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ள நிலையில், அதிகமான அளவில் டிக்கெட்டுகள் புக்காகியுள்ளன.

லியோ படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து பேசிய கலை இயக்குநர் சதீஸ்குமார்: நடிகர் விஜய், த்ரிஷா நீண்டு ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றன. இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங்குகள் வெளிநாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் துவங்கியுள்ள நிலையில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
கேங்ஸ்டர் படமாக வெளியாகயுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர், கிளிம்ப்ஸ் வீடியோக்கள், போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சமீபத்தில் வெளியான மெலடி பாடலை கேட்டு நடிகர் விஜய்யே ஆச்சர்யப்பட்டு போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் இயக்கத்தில் மெலடி பாடலா என்று அவர் ஆச்சர்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தினைப் பார்த்து விஜய் அதிகமான அளவில் இம்ப்ரஸ் ஆனதாக லோகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு லோகேஷின் அடுத்தடுத்த பேட்டிகள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தன. லியோ, தலைவர்171 உள்ளிட்ட தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்து லோகேஷ் அடைமழை போல அதிகமான கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இந்தப் பேட்டிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று லியோ படத்திற்கும் சிறப்பான பிரமோஷனாக அமைந்தன.

லியோ படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து பல்வேறு கணிப்புகள், எதிர்பார்ப்புகள் நிலவிவருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ், கைதி படத்தின் க்ளைமேக்ஸ் ரசிகர்களிடையே ஏற்படுத்திய அதிகப்படியான தாக்கத்தை போன்று அமையும் என்று படத்தின் ஆர்ட் டைரக்டர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் வெற்றியில் அதன் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதேபோன்ற தாக்கத்தை லியோ படமும் ஏற்படுத்தும் என்று சதீஸ்குமார் கூறியுள்ளது ரசிகர்களை மேலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் லோகேஷ் பல்வேறு திட்டமிடல்களுடன் செய்துள்ளதாக இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் LCUவில் இடம்பெறுமா என்ற கேள்விக்கும் இல்லை என்பதே பல்வேறு தரப்பினரின் பதிலாக உள்ளது. எதுவாகிலும் இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து சஸ்பென்களும் உடைக்கப்படும் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications











