நடிகர் - ஆர்ட் டைரக்டர் சக்திராஜ் மரணம்!
சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டரும், நடிகருமான சக்திராஜ் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலாமனார். அவருக்கு வயது 58.
இவர் 100 படங்களில் நடித்துள்ளார். 75 படங்களுக்கு மேல் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார்.
சக்திராஜ் உடல் ஏவி.எம் இடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக சக்திராஜ் உடலுக்கு, விஜய் ஆனந்த், சந்தோஷ், பூங்கா கிருஷ்ணமூர்த்தி, மகி, சுரேஷ், அண்ணாமலை, அண்ணாதுரை, சத்யசாய், நந்தகுமார் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனத்துக்குப் பிறகு அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் விஜய் ஆனந்த், நந்தகுமார், ராஜ்குமார், நாம்தமிழர் இயக்க சுரேஷ் போன்றோர் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
Comments


Click it and Unblock the Notifications