அடப்பாவமே, காஷ்மீருக்காக போட்டா போட்டி போட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள்
Recommended Video
மும்பை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதை அடுத்து பாலிவுட் தயாரிப்பாளர்கள் பிசியாகிவிட்டனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கும் வகையில் காஷ்மீர் ஹமாரா ஹை, தாரா 370, ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 35ஏ உள்ளிட்ட 50 தலைப்புகளை பாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்த தலைப்புகளை பதிவு செய்ய அவர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர்.
யுரி தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட யுரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் சூப்பர் ஹிட்டானது. விக்கி கவுஷல் நடித்த அந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் புல்வாமா: தி டெட்லி அட்டாக், சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 உள்ளிட்ட தலைப்புகளை பதிவு செய்தனர்.
பாலிவுட் படங்கள் பலவற்றின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெறுவது வழக்கம். ஹீரோ, ஹீரோயின் டூயட் பாட வேண்டும் என்றால் உடனே காஷ்மீருக்கு கிளம்பிவிடுவார்கள். இந்நிலையில் தான் காஷ்மீர் குறித்த தலைப்புகளை பதிவு செய்துள்ளனர்.
370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக சித்தார்த் மல்ஹோத்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளின் படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த படங்களின் ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்த திட்டமிட்ட நிலையில் சூழல் ஒத்து வராததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் ஹமாரா ஹை தலைப்பு சரி அது என்ன ஆர்டிகிள் 370 என்று நினைக்கலாம். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 தலைப்பை பார்த்து தான் ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 35 ஏ ஆகிய தலைப்புகளை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











