பிரபல நட்சத்திரங்களின் மேனேஜர் அஜீத் மரணம்
பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மேனேஜராகப் பணியாற்றிய அஜீத் நேற்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63.
நயன்தாரா, அஞ்சலி, ஹன்சிகா, நஸ்ரியா உள்பட பல நடிகர் நடிகைகளுக்கு மேனேஜராக இருந்தவர் அஜீத். இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவருக்கு நினைவு திரும்பவே இல்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் நேற்று மாலை 6 மணியளவில் காலமானார். அவரது உடல் பெருங்குடி அண்ணா சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இதில் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











