twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட ஒரு கூட்டம் இப்படித்தான் விமர்சித்துக் கொண்டே இருக்கும்.. விட்டுத் தள்ளுங்கப்பா!

    |

    சென்னை: பிரபலமாக இருப்பது வரமா? சாபமா? என்பது கேள்விக்குறியான ஒன்று. தான் விரும்பியதை விரும்பியபடி செய்ய சாமனியனுக்கு இருக்கும் உரிமை ஒரு பிரபலத்திற்கு இருப்பதில்லை. அதேபோல் பிரபலங்கள் என்ன செய்தாலும் குறை சொல்வதற்கென ஒரு கூட்டம் எப்போதும் உண்டு.

    சமீபத்திய உதாரணம், ஏ.ஆர்.ரஹ்மான் மகள். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக, மும்பை தாராவியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் மேடையில் தனது தந்தை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனால் அவர் கண்கள் மட்டும் தெரியும்படி பர்தா அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகளும் தக்க பதிலடி கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இருப்பினும், இது போன்றதொரு நிகழ்வு வேறொருவருக்கு நிகழாது என கண்டிப்பாக சொல்ல முடியாது. பிரபலங்களின் ஆடை மீதான விமர்சனம் புதிது அல்ல. காலம் காலமாக நிகழ்ந்து வருவதுதான் என்றாலும், சமீபத்திய சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு.

     சமந்தாவின் ஆடைகள்

    சமந்தாவின் ஆடைகள்

    நாக சைதன்யாவை மணந்து கொண்ட நடிகை சமந்தா, சமூக வலைதலங்களில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அப்படி அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று, மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. திருமணமானவர் இவ்வாறு உடை அணியலாமா? என பலத்த விமர்சனம் எழுந்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கவும் சமந்தா தயங்கவில்லை.

    கனவுக் கன்னி

    கனவுக் கன்னி

    சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த பிரியா பவானி சங்கரையும் உடை சர்ச்சை விட்டுவைக்கவில்லை. இவர் செமி ட்ரான்ஸ்பரன்ட் உடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவிற்கு, ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே கிளம்பின. நீங்கள் இனி என் கனவுக்கன்னி இல்லையென ஒரு ரசிகர் பதிவிட, இப்படிப்பட்ட மோசமான எண்ணங்களை உடையவருக்கு கனவுக்கன்னியாக இருக்க தனக்கும் விருப்பமில்லை என சுடச்சுட பதிலளித்தார் பிரியா.

    பிரியங்கா சோப்ராவுக்கும்

    பிரியங்கா சோப்ராவுக்கும்

    நம்ம ஊரில் தான் இப்படியென்றால், ஹாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா சோப்ராவையும் உடை சர்ச்சை விட்டுவைக்கவில்லை. 89-வது ஆஸ்கர் விருது விழாவில் அவர் அணிந்து வந்த உடை விமர்சனத்திற்குள்ளாக, உடை குறித்த விமர்சனங்களை கேட்டு போரடித்துவிட்டதாக, பதிலளித்தார்.

    சானியாவும்

    சானியாவும்

    சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, சானியா மிர்சா, மேரி கோம் போன்ற வீராங்கனைகளும் அவர்கள் விளையாடும்போது அணியும் உடைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. டென்னிஸ் விளையாடும்போது குட்டை பாவாடை அணிந்துள்ளார் என விமர்சித்த கூட்டம், ரஹ்மான் மகள் பர்தா அணிந்தபோது அதையும் விமர்சித்துள்ளனர். ஆக என்ன செய்தாலும் அதை குறை கூறுவதற்கென்று ஒரு கூட்டம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

    English summary
    Freedom to choose our dress has become a controversy always for VIPs. But it is not limited to India only, but it is a global issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X