திகில் காட்சிகள் நிறைந்த பேய் படம்.. அருள்நிதியின் டிமான்டி காலனி 2 டிரைலர் வெளியானது

சென்னை: டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. தியேட்டரில் ஹிட்டடித்த இத்திரைப்படம் வசூலை அள்ளியது.

இப்படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

Arul nidhis demonty colony 2 movie trailer out

டிமான்ட்டி காலனி படம்: ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிரட்டியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நொடிக்கு நொடி ட்விஸ்டுடன் வெளியான இப்படத்திற்கு என்று தனி ரசிகர்களே உண்டு.

டிமான்ட்டி காலனி 2 படம்: படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே, டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். மேலும் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

பர்ஸ்ட் லுக்: கடந்த ஆண்டு இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கல்லறையில் இருந்தபடி அருள்நிதி போஸ் கொடுத்திருந்தார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் முந்தைய பாகத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடப்பது போல, கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

பீதியை கிளப்பும் டிரைலர்: இந்நிலையில் டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் முதல் பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் டிரைலர் மிகவும் மிரட்டலாக உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படத்தில் VFX காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

அண்மைக்காலமே காமெடியாக பேய்களை பார்த்து பழகிப்போன நமக்கும், பீதியை கிளப்பி சீட்டின் நுனியில் அமர வைக்கும் வகையில் உள்ளது டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலர். இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் டிரைலரே இப்படினா... படம் எப்படி இருக்கும் என்று கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X