Demonte colony 2: இருள் ஆளப்போகிறது.. டிமான்டி காலனி 2 படத்தின் மிரட்டலான வீடியோ ரிலீஸ்!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த டிமான்டி காலனி படம் ரிலீசானது.

அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்தப்படம் பேய் படங்களுக்கே உரிய சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.

இந்தப் படத்தின் சிறப்பான வெற்றியை தெடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தையும் அஜய் ஞானமுத்துவே இயக்கியுள்ளார்.

Arul nithis Demonte colony 2 movie Making video released and impressed fans

டிமான்டி காலனி 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு: நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது டிமான்டி காலனி. ஒரே அறையில் இந்தப் படத்தின் அதிகமான சூட்டிங் நடத்தப்பட்டிருந்தது. ஆனாலும் ரசிகர்களை சீட்டின் நுனியில் இந்தப் படம் அமரவைத்தது. பேய்களை வைத்து காமெடி செய்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.

படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். அறிமுகப்படத்திலேயே ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கிமுடித்துள்ளார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்திலும் அருள்நிதியே லீட் கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், சரியான திட்டமிடலுடன் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

கடந்த நவம்பரில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் படத்தில் நாயகியே இல்லாத நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தறபோது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பான வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இருள் ஆளப்போகிறது என்ற வாசகத்துடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிமான்டி காலனி படம் மூலம் சிறப்பான மற்றும் குறைந்த அளவிலான பட்ஜெட்டில் படத்தை கொடுத்திருந்தார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே அறையில் படமாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோ, படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டும்வகையில் அமைந்துள்ளது. இந்தப்படமும் முதல் படத்தை போலவே அதிகமான ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X