Demonte colony 3 movie: அடுத்த பாகத்துக்கு தயாராகும் டிமான்டி காலனி.. மீண்டும் இணையும் கூட்டணி!
சென்னை: கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் டிமான்டி காலனி. ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் அருள்நிதி லீட் கேரக்டரில் நடித்திருந்தார். பரபரப்பான திரைக்கதையால் ரசிகர்களை இந்தப் படம் கட்டிப் போட்டது. வசூல்ரீதியாகவும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கரும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

டிமான்டி காலனி படம்: நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் அபிஷேக், ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது டிமான்டி காலனி படம். ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். சென்னையில் உள்ள டிமான்டி காலனி என்ற இடத்தை மையமாக கொண்டுஇந்தப் படத்தின் கதைக்களத்தை இயக்குநர் அமைத்திருந்தார். பேயையும் காமெடியாக்கி அழகு பார்த்த நேரத்தில், பேய் என்றால் அது திகிலைத்தான் கிளப்ப வேண்டும் என்று தீர்மானமாக சொன்ன இந்தப் படத்தையும் அதன் திகில் அனுபவத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். விளைவு படம் மிகப்பெரிய வெற்றி.
இரண்டாவது பாகம்: இந்தப் படத்தின் அடுத்தப் பாகத்தின் தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில் 9 ஆண்டுகள் கடந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. முதல் பாகத்தில் நண்பர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திகில் அனுபவத்தை மையமாக வைத்திருந்த இயக்குநர் இரண்டாவது பாகத்தில் சைனீஸ் உணவகத்தை கதைக்களமாக்கினார்.
3வது பாகத்தின் வேலைகள் துவக்கம்: முதல் பாகத்தோடு இரண்டாவது பாகத்தை கச்சிதமாக பொருத்தி ரசிகர்களை ஒன்ற செய்திருந்தார் அஜய் ஞானமுத்து. இரண்டாவது பாகமும் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகச்சிறப்பாக அமைந்த நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளை தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்திலேயே மூன்றாவது பாகத்திற்கான லீடும் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை கொடுக்க 9 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது போல இல்லாமல் இந்த மூன்றாவது பாகம் விரைவிலேயே ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
பிரம்மாண்டமாக உருவாக்க திட்டம்: தற்போது மூன்றாவது பாகத்தின் வேலைகளை துவங்கியுள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் படத்தின் அதிகமான சூட்டிங்குகள் ஜப்பானில் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 35 கோடி ரூபாய் எனவும் படம் வரும் 2027ம் ஆண்டில் ரிலீசுக்கு திட்டமிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











