க்ரைம் திரில்லர் படங்களாக தேர்வு செய்யும் அருள்நிதி.. காரணம் பின்னணி என்னவா இருக்கும்?

சென்னை: க்ரைம் திரில்லர் படங்களுக்கென்று பேர் போனவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாகவே இருந்தாலும் நல்ல வரவேற்பை பெரும்.

Recommended Video

Arulnidhi ,Ron Ethan Innasi Pandian | இந்த படத்தின் Climax பலரை பதபதைக்க வைக்கும் | *interview

வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி.

தற்போது இவரது நடிப்பில் டைரி திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளிவர உள்ளது.

க்ரைம் திரில்லர் நாயகன்

க்ரைம் திரில்லர் நாயகன்

வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம் படத்திற்குப் பிறகு உதயன், மௌனகுரு, டிமான்டி காலனி போன்ற பல த்ரில்லர் படங்களில் இவர் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் நாயகன் என்று சொல்லும் அளவிற்கு இவர் தேர்வு செய்யும் கதைகளுக்கும், இவருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்து வெளியான மௌனகுரு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நடிகர் அருள்நிதி பல தரமான படங்களில் நடித்துள்ளார். தனக்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் வெளிவந்த ஆறாது சினம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அருள்நிதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அடுத்தடுத்து பல படங்கள்

அடுத்தடுத்து பல படங்கள்

அருள்நிதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. க்ரைம் திரில்லர் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதிக்கு தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்து வருகின்றது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான டி ப்ளாக், தேஜாவு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்போது டைரி என்ற திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது.

எதிர்பார்ப்பை தூண்டும் டைரி

எதிர்பார்ப்பை தூண்டும் டைரி

பைவ் ஸ்டார் கிரியேஷன் எஸ் கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ள இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து அருள்நிதியுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளதாக கூறுகின்றனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ரான் யோகன். இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் அருள்நிதி ஹிட் லிஸ்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன காரணம்

என்ன காரணம்

நடிகர் அருள்நிதி நடித்த பல படங்கள் க்ரைம் திரில்லர் படங்களாக இருப்பதால் க்ரைம் திரில்லர்களின் நாயகன் என்று இவரை அழைக்க தொடங்கியுள்ளனர். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் த்ரில்லர் படமாக இருப்பதால், இவருக்கு த்ரில்லர் தான் பிடிக்குமா இல்லை, இவருக்கென்றே கதை எழுதுகின்றார்களா? இல்லை இவருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களே இப்படித்தானா என்று ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். எது எப்படியோ அருள்நிதி என்று சொன்னாலே ரசிக்கும் படியான க்ரைம் த்ரில்லர் படமாக தான் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X