அருள்நிதியின் மிரட்டலான டி பிளாக் படம்... படத்திற்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்!
சென்னை : நடிகர் அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் படம் d-block.
இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை யூடியூபர் எருமை சாணி புகழ் விஜயகுமார் இயக்கியுள்ளார்.

D-block படம்
யூடியூப் எருமை சாணி புகழ் விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் d-block. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடி ஆகியுள்ளார் அவந்திகா.

ரான் யோஹன் இசை
படத்திற்கு இசையமைத்துள்ளார் மாயா படப்புகழ் ரான் எத்தன் யோஹன். படத்தின் ஒளிப்பதிவை நட்பே துணை, டிமான்டி காலனி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அரவிந்த் சிங் மேற்கொண்டுள்ளார். இவர் தனது எம்என்எம் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

கல்லூரி பின்புலத்தில் கதை
கல்லூரி பின்புலத்தில் நடைபெறும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரிலீசுக்கு தயார்
இதையடுத்து விரைவில் படம் ரிலீசாக உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே சக்தி பிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் படத்தின் தமிழக விநியோக உரிமையை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த படம் தமிழகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள்
சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருள்நிதி. அவரது முந்தைய படங்கள் அவருக்கு சிறப்பான பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அவரது கைவசம் தற்போது டி பிளாக் மட்டுமன்றி டைரி, தேஜாவு உள்ளிட்ட படங்கள் உள்ளன. விரைவில் இந்த படங்களும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











