சுடச்சுட பஜ்ஜி வாங்கி நாயகி செய்த காரியம்.. ஷாக்கான அருள்நிதி.. ஜூலை 1ல் வெளியாகும் டி பிளாக்!
சென்னை : நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் டி பிளாக். இந்தப் படத்தை பிரபல யூடியூபர் விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.
ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 1ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

நடிகர் அருள்நிதி
நடிகர் அருள்நிதி தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தனக்கென இமேஜ் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது டிமாண்டி காலனி உள்ளிட்ட படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் டி பிளாக் படம் உருவாகியுள்ளது.

ஜூலை 1ல் ரிலீஸ்
பிரபல யூடியூப் சேனலான எருமசாணி புகழ் விஜயகுமார் ராஜேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 1ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்திற்கு ரத்தன் யோகான் இசையமைத்துள்ள நிலையில் தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவை அரவிந்த் சிங் செய்துள்ளார்.

கல்லூரி மாணவராக அருள்நிதி
படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடித்துள்ளார். படத்தில் விஜயகுமார், உமா ரியாஸ், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

ஸ்னீக் பீக் வெளியீடு
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இதில் கல்லூரியில் அடித்து பிடித்து கூட்டத்திற்கிடையில் பஜ்ஜியை வாங்கும் நாயகி, யாரும் பார்க்காத வகையில் தனியாக சென்று, பஜ்ஜியில் துப்புகிறார். இதைப் பார்த்து

தனுஷுடன் மோதும் அருள்நிதி
இந்தப் படம் வரும் ஜூலை 1ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அதே நாளில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலமும் ரிலீசாக உள்ளது. இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேஜாவு படமும் ரிலீஸ்
இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த படமான தேஜாவு படம் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், சேத்தன், காளி வெங்கட் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











