அருள்நிதியின் கலக்கல் கூட்டணி... ட்ரெண்டாகி வரும் டி பிளாக் படத்தின் ட்ரெயிலர்

சென்னை : நடிகர் அருள்நிதி லீட் கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள படம் டி பிளாக்.

அருள்நிதியின் 15வது படமான டி பிளாக்கின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ட்ரெயிலரும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அருள்நிதி

நடிகர் அருள்நிதி

வம்சம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்ட அருள்நிதி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது மௌனகுரு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், பிருந்தாவனம் மற்றும் கே 13 ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

இந்நிலையில் யூடியூபில் எருமசாணி மூலம் புகழ்பெற்ற விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 15வது படத்தில் நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

படத்தை கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி

படத்தை கைப்பற்றிய சக்தி பிலிம் பேக்டரி

அமானுஷ்யத்தை கையில் எடுத்துள்ள இயக்குநர் அதை சிறப்பான வகையில் காட்சிப்படுத்தியுள்ளது ட்ரெயிலரின் காட்சிகள் மூலம் தெரிகிறது. படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ளார். இதனிடையே படத்தை சக்தி பிலிம் பேக்டரி தற்போது கைப்பற்றியுள்ளது.

ரான் யோஹன் இசை

ரான் யோஹன் இசை

படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு சமீபத்தில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகியுள்ளார் அவந்திகா. படத்திற்கு மாயா படத்தில் இசையமைத்துள்ள ரான் யோஹன் இசையமைத்துள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

கல்லூரி பின்புலத்தை மையமாக கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அருள்நிதியின் கைகளில் அடுத்ததாக டைரி, தேஜாவு உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்தப் படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

ட்ரெண்டான ட்ரெயிலர்

ட்ரெண்டான ட்ரெயிலர்

இதனிடையே நேற்றைய தினம் வெளியான டி பிளாக் படத்தின் ட்ரெயிலர் தற்போது ஒன்றரை மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இதன்மூலம் யூடியூபிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X