அருள்நிதியின் அடுத்த த்ரில்லர் .. வெளியானது அருள்நிதியின் டைரி டீசர்!

சென்னை: இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைரி.

ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் அருள்நிதி.

இந்த படத்தின் டீசரை நடிகர் கார்த்தி, ஆர்யா, ராணா ஆகியோர் நேற்று மாலை வெளியிட்டனர்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

அருள்நிதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் களத்தில் சந்திப்போம். அருள்நிதி உடன் ஜீவா இந்த படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் அடுத்து டைரி வெளிவரவுள்ளது.

கதை தேர்வு

கதை தேர்வு

அருள்நிதியின் கதைத்தேர்வு நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மௌன குரு, டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், K - 13 என த்ரில்லர் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுகிறார். டைரி திரைப்படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞான முத்துவின் உதவி இயக்குனரான இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் அருள்நிதி நடித்த டிமாண்டி காலணி படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். டைரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

விரைவில் ரிலிஸ்

விரைவில் ரிலிஸ்

உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. த்ரில்லர் பாணியில் படம் ரசிகர்களை கவரும் என்பது டீசரை பார்த்த உடனே தெரிகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X