ஷங்கர் மகளை தொடர்ந்து ஹீரோயினாக மாறிய மூன்றாவது டாக்டர்... அருள்நிதியின் டைரி அப்டேட்ஸ்

சென்னை: டீ பிளாக், தேஜா வு திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிககவிருக்கும் திரைப்படம் டைரி.

Recommended Video

Open-னா பதில் சொன்ன Adithi Shankar... இப்படி பேசினா பொழச்சிப்பம்மா! *Kollywood

பல புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ள அருள்நிதி இந்த முறையும் இன்னாசி பாண்டியன் என்ற இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார். அருள்நிதி நடித்திருந்த ஆறாது சினம் படத்தில் இயக்குநர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. காரணம் மலைப்பிரதேசத்தில் ஒரு பேருந்தில் நடக்கக் கூடிய அமானுஷ்யம் கலந்த திரில்லர் படமாக டிரைலர் இருந்தது.

டைரியின் விவரங்கள்

டைரியின் விவரங்கள்

டைரி திரைப்படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் தயாரித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ள கதிரேசன் இந்தப் படத்தையும் மிகுந்த பொருட்செலவில் எடுத்துள்ளாராம். மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை இவர்தான் வாங்கியுள்ளார். அருள்நிதியின் அண்ணன் உதயநிதி அவர்களின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்தப் படத்தை விநியோகம் செய்கிறார்கள்.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

படங்களை தயாரிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் மாறி இருக்கிறார் தயாரிப்பாளர் கதிரேசன். தற்சமயம் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ருத்ரன் திரைப்படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு 23ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகீர் அனுபவம்

பகீர் அனுபவம்

இந்தப் படம் பார்த்த பின்பு யாரேனும் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் சென்றால் குறிப்பாக எந்த மலைப்பிரதேசத்திலும் 13-வது கொண்டை ஊசி வளைவை கடந்தால் மக்கள் பீதி அடைவார்கள். அந்த அளவிற்கு டைரி தாக்கத்தை ஏற்படுத்தும் என அருள்நிதி கூறியுள்ளார். மாயா, கேம் ஓவர், டீ பிளாக் போன்ற திகில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ரான் ஈத்தன் யோகன் இந்த திகில் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

டாக்டர் ஹீரோயின்

டாக்டர் ஹீரோயின்

இந்தப் படத்தில் அருள்நிதி தவித்து நடிகர்கள் ஜெயபிரகாஷ், ஷா ரா, ருத்ரா மற்றும் நடிகைகள் பவித்ரா, சோனியா, தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போலிஸ் அதிகாரியாக நடித்துள்ள கதாநாயகி பவித்ரா நிஜத்தில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமா துறையில் நடிக்க வந்துள்ளார். இதற்கு முன்பு நடிகைகள் சாய் பல்லவி மற்றும் அதிதீ ஷங்கர் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு நடிகைகளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X