அக்கா, தம்பி அலப்பறை.. அருள்நிதியின் மை டியர் சிஸ்டர்.. படத்தின் ப்ரோமோ வெளியீடு!

சென்னை: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதியின் நடிப்பில் உருவான 'ராம்போ' கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது அருள்நிதி நடித்து இருக்கும் படத்திற்கு 'மை டியர் சிஸ்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள இப்படத்தை 'என்னங்க சார் உங்க சட்டம்' என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

Arulnithi mamta mohan doss My Dear Sister
Photo Credit:

மை டியர் சிஸ்டர்: கலகலப்பாக பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தில், அக்கா - தம்பி பாசம் மைய கருவாக உள்ளது. இப்படத்தில், மம்தா மோகன்ஸ்தாஸ் அக்காவாகவும் அருள்நிதி தம்பியாகவும் நடித்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில்ல் நடித்தது குறித்து பேசிய மம்தா மோகன்தாஸ், இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை. ஆணாதிக்க சிந்தனை கொண்ட தம்பிக்கும், பெண்ணியம் பேசும் அக்காவுக்கும் சிறு வயதிலிருந்தே ஈகோ இருக்கிறது. எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். அது, ஒரு கட்டத்தில் இருவரையும் எங்கு கொண்டு போய் நிறுத்துகிறது என்பது தான் படத்தின் கதை.

மம்தா மோகன்தாஸ்: திரைக்கதையை இயக்குநர் அருமையாக அமைத்திருக்கிறார். திருநெல்வேலி பின்னணியில் நடக்கும் கதை. படத்துக்காகத் திருநெல்வேலி வழக்கில் பேசப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். முன்னதாக 'ஸ்கிரிப்ட் ரீடிங்' பயிற்சி இருந்தது. படப்பிடிப்பின் போது அப்பயிற்சி அதிகம் உதவியது. நானே டப்பிங் பேசியிருக்கிறேன். கதைப்படி, சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, டக்கர் வண்டி ஓட்டும் பெண்ணாக நடிக்கிறேன். இத்தனை வருட சினிமா அனுபவத்தில் இந்த படம் என் மனதை தொட்ட திரைப்பட உள்ளது என்று பேசிஇருந்தார்.

மை டியர் சிஸ்டர்: இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அப்படத்தின் டைட்டில் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. "மை டியர் சிஸ்டர்" என பெயர் வைக்கப்பட்ட இந்த தலைப்புக்கு எதிர்மாறாக அக்காவும் தம்பியும் எலியும் புலியுமாக சண்டை போட்டுக்கொண்டு. ஒருவரை ஒருவர் தலையில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். கலகலப்பாக வெளியாகி உள்ள இந்த ப்ரோமோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X