7 கிலோ எடை குறைத்த அருள்நிதி.. இயக்குநராகும் எரும சாணி விஜய்.. என்ன சப்ஜெக்ட் தெரியுமா?
சென்னை: நடிகர்களாக மட்டுமின்றி, இயக்குநர்களாகவும் கலக்க யூடியூப் பிரபலங்கள் களமிறங்கி வருகின்றன.
எரும சாணி எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் குமார் ராஜேந்திரன் நட்பே துணை, 100, கே-13, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் விஜய் குமார், அடுத்ததாக அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

கதைத் தேர்வு
வம்சம், டிமான்டி காலனி, மெளனகுரு, கே-13 என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அருள்நிதி. மசாலா படங்களில் ஆர்வம் செலுத்தாமல், நல்ல கதைகளை கேட்டு, அதை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதிக்கு வசூல் ரீதியாக படங்கள் ஓடவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகின்றன.

எரும சாணி விஜய்
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யூடியூப் சேனலான எரும சாணி புகழ் விஜய் குமார் ராஜேந்திரன், ஹரிஜா உடன் இணைந்து நடித்த யூடியூப் வீடியோக்கள் எல்லாம், இளைஞர்களை கவர்ந்து, பல மில்லியன் வியூக்களை குவித்து, யூடியூப் டிரெண்டிங்கில் அவ்வப்போது, முதலிடத்தையும் பிடித்து வருகிறது.

யூடியூபர் டு இயக்குநர்
யூடியூபில் காமெடி வீடியோக்களை போட்டு, இளைஞர்களை ஈர்த்து வந்த விஜய் குமார் ராஜேந்தர், நட்பே துணை, 100, கே 13, நான் சிரித்தால் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது, அருள்நிதியை வைத்து தனது அறிமுக படத்தை விஜய் குமார் இயக்க உள்ளார்.

என்ன சப்ஜெக்ட்
பல வித்தியாசமான படங்களில் நடித்து வந்த அருள் நிதி, நிஜ சம்பவத்தை அடிப்படியாக வைத்து, எரும சாணி விஜய் இயக்க உள்ள புதிய படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். இந்த படம் முழுவதும் கல்லூரியிலேயே நடைபெறும் என்றும், இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் என்றும் எரும சாணி விஜய் கூறியுள்ளார்.

7 கிலோ
கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்பதற்காக, 7 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாகவும், யங்காகவும் அருள்நிதி மாறியுள்ளார். டிமான்டி காலனி படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், தான் இந்த புதிய படத்தை தயாரிக்கிறார். கே-13 படத்தில் அருள்நிதிக்கு நண்பனாக நடித்த விஜய் குமார், தற்போது அவரை இயக்கப் போகிறார். மற்ற விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











