மரம்.. பச்சோந்திக்கு நடுவே அருள்நிதி… ‘D Block‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

சென்னை : அருள்நிதி நடிக்கும் D Block படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்தில் அவந்திகா,அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

வித்தியாசமான கதை

வித்தியாசமான கதை

கே13 படத்துக்கு பிறகு அருள்நிதி, ஜீவாவுடன் இணைந்து களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை அடுத்து தேஜாவு மற்றும் டி பிளாக் படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி, யூடியூப் புகழ் எருமசாணி விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் எருமசாணி விஜய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

D Block படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அருள்நிதியின் பிறந்த நாளான இன்று காலை 11 மணிக்கு வெளியானது. மரங்கள் மற்றும் பச்சோந்திகளுக்கு நடுவே அருள்நிதி ஒரு வித பயத்துடன் காணப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவந்திகா

அவந்திகா

இந்த படத்திற்கு விஜய் குமார் ராஜேந்திரன் கதை எழுதி உள்ளார் எம்.என்.எம். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவந்திகா,அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

இதேபோல, அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X