For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  D Block Review: லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த உண்மை சம்பவக் கதை.. டி ப்ளாக் விமர்சனம் இதோ!

  |

  சென்னை: இப்போதான் சுந்தர். சி, ஜெய்யின் பட்டாம்பூச்சி சைக்கோ படத்தை பார்த்து நொந்து போனோம், அதற்குள் இன்னொரு சைக்கோ படமா போதுமடா சாமி என தியேட்டருக்கு வந்த 20 யூடியூபர்களே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது எருமை சாணி விஜய் இயக்கி உள்ள இந்த டி ப்ளாக் திரைப்படம்.

  கமர்ஷியல் படத்தில் நடிக்காமல் நல்ல கிரைம் த்ரில்லர் படங்களில் நடிப்பவராச்சே அருள்நிதி அவருடைய படம் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என பார்த்தால், இந்த முறை அவரே உண்மைச் சம்பவ கதை என டைட்டிலில் போட்டதை பார்த்து ஏமாந்து போயுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

  லேடிஸ் ஹாஸ்டல் பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு பின்னணியில் இருப்பது அமானுஷ்ய சக்தியா? சைக்கோவா? என்கிற கேள்வியுடன் படத்தைக் கொண்டு போயுள்ளார் யூடியூபர் விஜய்குமார் டிமான்டி காலனி படம் அளவுக்கு மிரட்டியதா? இல்லை உருட்டியதா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

  பாகுபலி மாதிரி கேட்டா...அதையே சுட்டிருக்கீங்களே...பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் பாகுபலி மாதிரி கேட்டா...அதையே சுட்டிருக்கீங்களே...பொன்னியின் செல்வனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

  என்ன கதை

  என்ன கதை

  ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவராக என்ட்ரி கொடுக்கிறார் அருள்நிதி. இயக்குநர் விஜய்குமார் அவருக்கு நண்பராக கூடவே காமெடி பண்ணுகிறேன் என தனது படத்திற்கு பெரிய வேகத்தடையாக மாறி உள்ளார். அந்த கல்லூரியின் லேடிஸ் ஹாஸ்டலில் இருக்கும் சில பெண்கள் மர்மமான முறையில் அவ்வப்போது மர்மான முறையில் இறந்து போகின்றனர். அவர்களை புலி அடிச்சிடுச்சு, சிறுத்தை அடிச்சிடுச்சு என கதை விடுகின்றனர். ஆனால், இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்கும் இன்வஸ்டிகேடிவ் அதிகாரியாக முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் அருள்நிதி எப்படி மாறுகிறார் என்பதும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா, அவரது அந்த பெரிய மோட்டிவ் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை.

  எருமைசாணி விஜய்

  எருமைசாணி விஜய்

  சில யூடியூபர்கள் படம் எடுக்கிறேன்னு அறிவிப்பு வெளியிட்டு இன்னமும் படத்தை எடுத்து வெளியிடாத நிலையில், அதன் பின்னர் படம் பண்ண ஆரம்பித்த எருமைசாணி விஜய் அருள்நிதியை வைத்து டி ப்ளாக் படத்தை எடுத்து வெளியிட்டதற்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மைக் கதையை தேடிக் கண்டுபிடித்து எடுக்க முயற்சித்ததும், முதல் பாதி முழுக்க அமானுஷ்ய படம் போலவும், இரண்டாம் பாதியில் கடைசி வரை சைக்கோ என்பதை சொல்லவே கூடாது என மெனக்கெட்ட விதத்திற்கும் பாராட்டுக்கள். ஆனால், படமாக உருவாக்கப்பட்ட விதத்தில் பல இடங்களில் கோட்டையை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய யூடியூப் வீடியோ போலவே பல இடங்களில் இஷ்டத்துக்கு காட்சிகள் காரணமே இல்லாமல் வந்து செல்கின்றன.

  அப்படியொரு ட்விஸ்ட்

  அப்படியொரு ட்விஸ்ட்

  நண்பர்களுடன் இணைந்துக் கொண்டு அருள்நிதி விசாரணை நடத்தி ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க முயல்கிறார். ஆரம்பத்தில் மரணிக்கும் பெண்களுக்கு இடையே ஒரு ஒற்றுமையை கண்டுபிடிக்கிறார். ஆனால், கடைசியில் அது இல்லை என்றும் அதுக்கும் மேல என வைத்திருக்கும் ட்விஸ்ட்டை பார்த்ததுமே தியேட்டரில் அனைவரும் காண்டாகி அந்த வார்த்தையை சொல்லியே திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

  பிளஸ்

  பிளஸ்

  த்ரில்லர் படத்திற்கு பலமே இசையமைப்பாளர் தான். இந்த படத்திற்கு பகீர் பிஜிஎம்களை ரோன் எத்தன் யோஹான் என்பவர் தரமாக போட்டு மிரட்டுகிறார். அதே போல பகலில் ஜாலியாகவும், இரவில் திகிலாகவும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பிளஸ் எதுவென்று பார்த்தால் ரம்பமாக இழுக்காமல் 2 மணி நேரம் 16 நிமிடங்களில் படத்தை முடித்திருப்பதே பெரிய ஆறுதல் தான். இன்னும் 16 நிமிடத்தையும் ட்ரிம் செய்திருந்தால், இன்னமும் க்ரிப்பாக இருந்திருக்கலாம். வில்லனாக நடித்திருக்கும் சரண் தீப்பின் தோற்றம் படத்திற்கு பிளஸ் ஆக மாறியுள்ளது.

  மைனஸ்

  ஏகப்பட்ட கோலிவுட் படங்களை போல இந்த படத்திலும் ஹீரோயின் அவந்திகா மிஷ்ரா செட் பிராப்பர்ட்டி போலவே வந்து செல்கிறார். கிளைமேக்ஸில் எப்படியும் ஹீரோயின் வில்லனிடம் சிக்குவார், ஹீரோ அவரை காப்பாற்றுவார் என்கிற அதே அரத பழைய கதையை யங் யூடியூபரான விஜய்யும் வைத்திருப்பது ரசிகர்களை எங்கேயும் இம்ப்ரஸ் பண்ணவே இல்லை. அருள்நிதிக்கு தேவையான நடிப்புத் தீனியையோ அவருக்கான ஹீரோயிசத்தையும் கொஞ்சம் கூட வைக்காமல் ஏமாற்றி விட்டார் இயக்குநர். டிமான்டி காலனி போல எடுக்க நினைத்து டிமான்டி காலனி யூடியூப் வீடியோ எடுத்தது போலத்தான் உள்ளது.

  English summary
  D Block Movie Review in Tami (டி ப்ளாக் விமர்சனம்): Erumai Saani Vijay's directorial debut movie D Block released this week. Arulnithi and Avantika Sharma done the lead roles.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X