அருள்நிதி நடிக்கும் தேஜாவு… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !
சென்னை : அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அறிமுகம்
வம்சம் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அருள்நிதி. இந்த திரைப்படம் விமர்சனரீதியாக ஓரளவுக்கு திரையில் ஓடி இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, இவருக்கு அவ்வப்போது பட வாய்ப்புகளும் வந்தன.

பரபரப்பான படம்
அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய டிமாண்டி காலனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் ஒரு திகில் திரைப்படமாகும். இப்படத்தில் ராமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் நடித்திருந்தனர். படம் முழுக்க ஒரே வீட்டுக்குள் காட்சிக்கு காட்சி பரபரப்பாக இருக்கும்.

திகில் படத்தில் ஆர்வம்
ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம் போன்ற படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களாக அமைந்தன. க்ரைம், திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள அருள்நிதி, அதற்கு தகுந்தவாறு கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு பணிகளையும், அருள் ஈ சித்தார்த் எடிட்டிங் பணிகளையும் கவனித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி
வெளியாகி உள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு பேடில் அருள்நிதியின் புகைப்படமும், அதன் பக்கத்தில் ரத்தக்கரையும் ஒரு துப்பாக்கியும் உள்ளது. இந்த படமும் ஒரு திகில் திரைப்படம் என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. தேஜாவு என்பது அறிவியல் மொழிப்படி ஏற்கெனவே பார்த்தது, ஏற்கெனவே உணர்ந்தது என்று பொருளாகும். அதற்கு ஏற்றது போல கதையில் பல சுவாரசியம் இருக்கும் என்று நம்பப்படுகிறது


Click it and Unblock the Notifications











