கம்பேக் கொடுக்க ரெடியான அஜய் ஞானமுத்து... மிரட்டும் டிமான்ட்டி காலனி 2 இன்ட்ரோ டீசர்
சென்னை: அருள்நிதி நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி இருந்த டிமான்டி காலனியின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிமான்டி காலனி அப்டேட் வீடியோ ரசிகர்களை மிரட்டும் வகையில் உருவாகியுள்ளது.

திரும்பி பார்க்க வைத்த டிமான்ட்டி காலனி
அருள்நிதி ஹீரோவாக நடித்த டிமான்ட்டி காலனி திரைப்படம் 2015ம் ஆண்டு ரிலீஸானது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் முதல் படமான இது, ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருந்தது. ஏராளமான ட்விஸ்ட்களுடன் செம்ம மிரட்டலான மேக்கிங்கில் ரிலீஸான டிமான்டி காலனி, பாசிட்டிவான விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் அஜய் ஞானமுத்துவின் டைரக்ஷன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் ஆகியோரும் நடிப்பில் மிரட்டியிருந்தனர்.

வெளியானது இரண்டாம் பாகம் அப்டேட்
அருள்நிதியின் கேரியரில் சிறப்பான சம்பவம் செய்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்திருந்தது. இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கும் டிமான்ட்டி காலனி 2ம் பாகத்தின் போஸ்டருடன் வெளியாகி இருந்தது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியதாக படக்குழு அறிவித்திருந்தது.

2023ல் இருள் ஆளப்போகிறது
டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே அஜய் ஞானமுத்து எழுதுவதாக முதலில் சொல்லப்பட்டது. மேலும், அவரிடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்குவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இயக்குவது உறுதியாகியுள்ளது. இதனிடையே தற்போது டிமான்டி காலனி 2 படத்தின் Announcement Video என்ற ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இருள் ஆளப்போகிறது என்ற கேப்ஷனுடன் தொடங்கும் இந்த வீடியோ, முதல் பாகத்தின் சீக்வெலாக நகர்கிறது.

கேரக்டர்கள் அறிமுகம்
மேலும், இந்தப் படத்தில் நடிக்கும் கேரக்டர்களை அறிமுகம் செய்யும் விதமாக வித்தியாசமாக உருவாகியுள்ளது. மீனாக்ஷி கோவிந்தராஜன், அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அருள் நிதி, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், இயக்குநர் அஜய் ஞானமுத்து என அனைவரின் போட்டோவும் ஒரு பாழடைந்த பங்களாவில் இருப்பதாக உருவாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா திரைப்படம் கடந்தாண்டு வெளியாகியிருந்தது. விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருந்த இந்தப் படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவியது. இதனால் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கவிருந்த படம் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தை தானே இயக்கலாம் என்ற முடிவுக்கு அஜய் ஞானமுத்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் மூலம் திரும்பவும் கம்பேக் கொடுக்க வெற்றித்தனமாக ரெடியாகி வருகிறாராம் அஜய் ஞானமுத்து.


Click it and Unblock the Notifications











