அருள்நிதியின் "டைரி" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை : களத்தில் சந்திப்போம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இளம் இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அருள்நிதி.

இரவுக்கு ஆயிரம் கண்கள்,மௌனகுரு, டிமான்டி காலனி என அருள்நிதி தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பொழுது அறிமுக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் டைரி படத்தில் நடித்து வருகிறார்.

டைரி படத்தைப் பற்றிய பல்வேறு அப்டேட்கள் வெளியாகி வந்த நிலையில் இப்பொழுது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

வெற்றிகளை குவித்து

வெற்றிகளை குவித்து

ஹிட் படங்கள் தோல்வி படங்கள் என மாறி மாறி கொடுத்துவரும் அருள்நிதி எப்பொழுதும் புதுமையான கதை களத்தை தேடிச்சென்று நடிப்பதை வழக்கமாக கொண்டவர். குறிப்பாக இளம் இயக்குனர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அந்தவகையில் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் இன்றுவரை பெயர் சொல்லும் அளவிற்கு சினிமாவில் வெற்றிகளை குவித்து வருகிறது.

களத்தில் சந்திப்போம்

களத்தில் சந்திப்போம்

டிமான்டி காலனி, மௌனகுரு,இரவுக்கு ஆயிரம் கண்கள், k13 என இவர் நடித்த திரைப்படங்கள் வித்தியாசமான கதை களத்தை கொண்டிருப்பதைக் காட்டிலும் புதுமுக இயக்குனர்களிடம் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள அருள்நிதி சமீபத்தில் ஜீவா உடன் இணைந்து கலக்கி இருந்த களத்தில் சந்திப்போம் பல தேதிகளில் வெளியாக இருந்து தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் இருக்க இப்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ளது.

உதவி இயக்குனராக

உதவி இயக்குனராக

களத்தில் சந்திப்போம் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி புதுமுக இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் குற்றம் 23, ஈரம், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் மற்றும் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

போலீஸ் கதாபாத்திரத்தில்

போலீஸ் கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு " டைரி " என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இதில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கதையாக உருவாகிவரும் டைரி படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் அருள்நிதி பார்க்கவே முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரி போல புல்லட்டில் கோவை - உதகை என எழுதப்பட்டிருக்கும் பஸ்ஸுக்கு முன்னாள் செல்கின்றவாறு உள்ளது. கும்மிருட்டில் கொட்டும் மழையில் பார்க்கவே திகில் கிளம்பும் வகையில் உள்ளது அந்த ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம். இந்தப் படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X