அருள்நிதியின் டைரி படம்... 15ம் தேதி டீசர் ரிலீஸ்.... அப்டேட் செய்த அருள்நிதி

சென்னை : அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்துள்ளவர் நடிகர் அருள்நிதி.

அவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் டைரி. படத்தை அறிமுக இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் அருள்நிதி தெரிவித்துள்ளார்.

சிறப்பான நடிகர்

சிறப்பான நடிகர்

வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து அதன்மூலம் தன்னை கோலிவுட்டில் சிறப்பான நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர் அருள்நிதி. கடந்த பிப்ரவரியில் ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த களத்தில் சந்திப்போம் படம் திரையரங்குகளில் வெளியானது.

வெற்றி பெற்ற படம்

வெற்றி பெற்ற படம்

ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் அருள்நிதி, ஜீவா, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக அருள்நிதி நடித்துவரும் டைரி படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

இன்னிசை பாண்டியன் இயக்கம்

இன்னிசை பாண்டியன் இயக்கம்

அருள்நிதியின் டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து மற்றும் அறிவழகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இன்னிசை பாண்டியன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அருள்நிதி அறிவித்துள்ளார்.

15ம் தேதி ரிலீஸ்

15ம் தேதி ரிலீஸ்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். இம்மாதம் 15ம் தேதி மாலை 6 மணியளவில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X