என் வாழ்க்கையை மாற்றிய காதலி.. பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவிற்கு வாழ்த்து சொன்ன அருண்!

சென்னை: கடந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவும், நடிகர் அருணும் காதலித்து வருவதாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து இருவரும் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில் அருண் பிரசாத் கேமரா முன்பு நின்று காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ந் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் ரவீந்தர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

bigg boss 8 arun archana

பிக் பாஸ் சீசன் 8: கடந்த சீசனில் சுமால் ஹவுஸ்,பிக் ஹவுஸ் என இருந்த நிலையில், இந்த சீசனில் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் டீம், பெண்கள் டீம் என இரு டீம்களாக இருக்கின்றனர். மற்ற சீசன்களைப் போல இந்த சீசனிலும் சண்டை, கலவரம், ஈகோ என நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நான்காவது வாரத்தில் தீபாவளி என்பதால், எலிமினேஷன் நடக்காத நிலையில் ஐந்தாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனிதா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார்.

நள்ளிரவில் வாழ்த்து: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வெற்றியாளரான அர்ச்சனாவும் அருணும் காதலித்து வருவதாக இணையத்தில் செய்தி பரவி வரும் நிலையில், நேற்று அர்ச்சனாவின் பிறந்தநாளுக்கு அருண் கேமரா முன் நின்று, ஹாய், நீ எல்லா இருப்ப என்று நம்புகிறேன், நானும் இங்கே நன்றாக இருக்கிறேன், நான் இந்த வாரம் கேப்டனாகி இருக்கிறேன். இன்று உன்னுடைய பிறந்த நாள், இந்த நாளில் அனைத்து விதமான வெற்றியும் உனக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை வாழ்த்துகிறேன். ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். இதை பார்த்த அர்ச்சனா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில்,

இதற்காகத்தான் காத்திருந்தேன்: இதைத்தொடர்ந்து நடிகை அர்ச்சனா, தனது எக்ஸ் தள பக்கத்தில், இப்போது தான் என் பிறந்த நாள் முழுமை அடைந்தது. இதை பார்க்கத்தான் இரவு 1 மணிவரை காத்திருந்தேன். நன்றி கேப்டன் என, அருணின் பெயரை குறிப்பிடாமல் பதிவு போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அருண் பிரசாத் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் அர்ச்சனாவும் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறுப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X