25 கொலையா... கணக்கு இடிக்குதே... சாணிக்காயிதம் ட்ரெயிலரில் கீர்த்தி பதிலை பாருங்க!

சென்னை : இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணைந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள படம் சாணிக் காயிதம். இந்தப் படம் வரும் மே மாதம் 6ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

சாணிக் காயிதம் படம்

சாணிக் காயிதம் படம்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது அவரது இயக்கத்தில் சாணிக் காயிதம் படம் அமேசான் ப்ரைமில் வரும் மே மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தியின் மாறுபட்ட நடிப்பு

கீர்த்தியின் மாறுபட்ட நடிப்பு

இதேபோல நடிகை கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தில் இருவரும் வழிப்பறி கொள்ளையர்களாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மிரட்டலான ட்ரெயிலர்

மிரட்டலான ட்ரெயிலர்

அதற்கேற்றாற் போல இருவரும் டீசரில் கையில் வலிமையான ஆயுதங்களுடன் காணப்பட்டனர். ஆனால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ட்ரெயிலர் படத்திற்கான மாறுபட்ட கோணத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரையும் காவல்துறையினர் விசாரிப்பதாகவும் அவர்கள் அதற்கு பதில் சொல்வது போலவும் இதன் காட்சிகள் அமைந்துள்ளன.

கொலை எண்ணிக்கை

கொலை எண்ணிக்கை

அதில் செல்வராகவனை முதலில் போலீசார் விசாரிக்கின்றனர். அதில் அவர் தனது அறிமுகத்தை வெளிப்படுத்தி பின்னர் தான் செய்த கொலைகளின் எண்ணிக்கையையும் யோசித்து 24 என்று கூறுகிறார். பின்னர் கீர்த்தி சுரேஷ் விசாரிக்கப்படுகிறார். அதற்கு அவர் 25 என்று கூறுகிறார்.

வன்முறைக் காட்சிகள் தூக்கல்

வன்முறைக் காட்சிகள் தூக்கல்

தொடர்ந்து காவல்துறையினர் கணக்கு இடிக்கிறதே என்று கூற, இருக்கும் ஆத்திரத்திற்கு அவரையும் கொல்ல தோன்றுவதாக அவர் கூறுகிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படத்தில் வன்முறை காட்சிகள் தூக்கலாக இருந்த நிலையில், இந்தப் படமும் அதே கதைக்களத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதிர்வலைகளை ஏற்படுத்துமா?

அதிர்வலைகளை ஏற்படுத்துமா?

இந்தக் படத்தின்மூலம் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான பரிணாமங்களை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படம் அவரது முந்தைய படம் போலவே தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X