Captain Miller Public Review: கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு.. ரசிகர்கள் கருத்து!

சென்னை: அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனுஷின் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதே போல் அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணி எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இன்று வெளியாகி உள்ள இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்து என்ன என்று பார்க்கலாம்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் நடக்கும் கதை தான் கேப்டன் மில்லர். இதில் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் சேர வேண்டும் என ஆசைப்படுகிறார் கதாநாயகன் தனுஷ். ஆனால், தனுஷின் அண்ணன் சிவராஜ்குமார் ஆங்கிலேயனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், தனுஷூக்கு ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் வேலை கிடைத்து விடுகிறது. அதில், துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்கள் கற்றுக் கொண்டு, ஒரு சிறந்த சிப்பாயாகிறார். இதையடுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்திய மக்களை சுட்டுதள்ள தனுஷுக்கு உத்தரவு வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த தனுஷ், பின் அனைவரையும் சுட்டுத்தள்ளுகிறார்.

Arun matheswaran and Dhanushs Captain Miller Public Review

தனது மக்களை கொன்று விட்டோமே என்ற எண்ணத்தில் இருக்கும் தனுஷ், இனி இதை செய்ய கூடாது என முடிவெடுத்து. இதற்கு காரணமாக இருந்த, ஆங்கிலேய தலைமை வீரரை கொன்றுவிடுகிறான். இதன்பின், தனுஷ் ஆங்கிலேயர்கள் தேடப்படும், கேப்டன் மில்லராக மாறுகிறார். அதன்பின் என்ன நடந்தது கேப்டன் மில்லராக தனுஷ் ஆங்கிலேயர்களின் கையில் சிக்கினாரா.. அவர் சந்தித்த பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.

படம் பக்கா மாஸ்: இன்று வெளியான படம் பார்த்த தனுஷ் ரசிகர் ஒருவர், கேப்டன் மில்லர் படம் நல்லா இருக்கு, படத்தின் மொத்த கதையை தனுஷ் தனது தோளில் சுமந்துள்ளார். எந்த இடத்திலேயேயும் லேக் இல்ல, ஸ்கிரீன் பிளே ரொம்ப சூப்பரா இருக்கு. படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பா இருக்கு. சிவராஜ் அவர்கள் ஜெயிலர் படத்தில் எப்படி மாஸ் கட்டி இருந்தாரோ அப்படி, இந்த படத்திலும் கலக்கி விட்டார். அவருக்கு இன்னும் சில காட்சிகள் கொடுத்து இருக்கலாம். படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை, படத்தில் நடித்த அனைவரும் நல்லா நடிச்சு இருக்காங்க படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.

பிஜிஎம் தாறுமாறு: மற்றொரு, கேப்டன் மில்லர் கதை ஏற்கனவே நாம் கேட்ட கதை போல இருந்தாலும், படம் எடுத்த விதமும், படத்தின் ஸ்கிரீன் பிளே சும்மா தரமா இருந்தது. வழக்கம் போல ஜிவி பிரகாஷ் பிஜிஎம் சும்மா தாறுமாறு செய்துவிட்டார். தனக்காக போராடும் ஒருபோராளியின் கதை தான் கேப்டன் மில்லர். இந்த படத்தின் மூலம் தனுஷ் நடிப்பு அசுரன் என்பதை மீண்டும் நிருப்பித்துள்ளார். கேப்டன் மில்லர் மாபெரும் வெற்றி பெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் இருக்கும் என்றனர்.

தரமான படம்: தனுஷுரோட நடிப்பு எப்போதுமே வேறலெவலில் இருக்கும் இதுவும் இந்த படத்தில் சும்மா அதிரிபுதிரி செய்துவிட்டார். ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு தரமானபடத்தை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். படம் அதிரடி ஆக்ஷன் என்று சும்மா அதிரடியாக இருக்கு படம் 100 நாளுக்கு மேல் ஓடும். படம் கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குநர் சும்மா செஞ்சிட்டாரு, இந்த பொங்கல் விடுமுறைக்கு ஏற்றப்படம், குடும்பத்தோடு ஜாலியா பார்க்கலாம் என்று ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்தை கொண்டாடினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X