கெட்ட வார்த்தை.. மொத்த டிரைலரும் மியூட்.. லோகேஷின் ‘டிசி’ சர்ச்சை கிளப்பும் டிரைலர்!

சென்னை: ராக்​கி, சாணிக்​கா​யிதம், கேப்​டன் மில்​லர் படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்கி இருக்கும் படம் 'டிசி'. சன் பிக்​சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்திலும், வாமிகா கபி சந்திரா என்கிற ரோலிலும் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்த ஏற்கனவே டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் வெற்றிக்கு பின், 'கைதி' திரைபடத்தை இயக்கினார். அந்த படம் லோகேஷ் கனகராஜை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. அதன் பின், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்யை வைத்து படம் இயக்கினார். கடைசியாக இவர் இயக்கி கூலி படம் நல்ல வசூலை அள்ளியது.

லோகேஷ் கனகராஜ்: இயக்குனராக இருந்த லோகேஷ் கனகராஜ் நாயகனாக 'டிசி' படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் சஞ்சனா, வாமிகா கபி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை காதலர் தினத்தில் படக்குழு வெளியிட்டது. அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் சஞ்சனா சிகரெட்டை பிடித்துக்கொண்டு இருக்க, அந்த அறைக்குள் லோகேஷ் வருவது போல காட்சி இடம் பெற்று இருந்தது.

DC Trailer Lokesh Kanagaraj
Photo Credit:

ஒரே கெட்டவார்த்தை: இந்நிலையில், சற்று முன் 'டிசி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலர் தொடங்கும் போதே ஒரு காரில் பெண் ஒருவர் அலறிக் கத்தும் காட்சி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு, ரத்தக்கறை, ஆக்ஷன் காட்சிகள் என டிரைலர் முழுவதும் பரபரப்பாக நகர்கிறது. பணத்திற்காக பெற்ற மகளை தவறான தொழிலில் தள்ளிவிடும் பெற்றோரிடமிருந்து, சந்திராவை தேவதாஸ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது. டிரைலரின் கடைசியில் "அவ பேரு சந்திராடா..." என கெட்ட வார்த்தையுடன் டிரைலர் முடிகிறது. 3 நிமிடம் ஓடும் இந்த டிரைலரிலேயே ஏராளமான கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால் அவற்றுக்கு மியூட் போடப்பட்டுள்ளது. இதனால் படம் முழுவதும் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும், சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X