‘கேப்டன் மில்லர்’ இப்போ ரிலீஸாவது 2வது பாகம்.. இயக்குநர் கொடுத்த தரமான அப்டேட்!
சென்னை: கேப்டன் மில்லர் படம் 3 பாகமாக உருவாகும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையில் வெளியாக இருப்பதால், படத்தின் அடுத்தகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகர் தனுஷ்: கேப்டன் மில்லன் திரைப்படம்1930 மற்றும் 40 காலகட்டத்தில் எடுக்கப்படும் படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதி வருகிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிய பட்ஜெட் படம்: கேப்டன் திரைப்படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். தனுஷ் இதுவரை நடித்த படங்களை விட இத்திரைப்படம் அதிக பட்ஜெட்டிலும்,பெரும் பொருட்செலவிலும் உருவாகி வருகிறது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: அண்மையில் இத்திரைப்படத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 5.5 மில்லியன் பாலோவர்களை கவர்ந்தது. இந்த வீடியோவை இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் காவியமாக இருக்கப் போகிறது என பாராட்டியுள்ளார்.
கேப்டன் மில்லர் 3 பாகம்: படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து அருண் மாதேஷ்வரன், கேப்டன் மில்லர் திரைப்படம் 3 பாகமாக உருவாகும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வருவது இரண்டாம் பாகம் தான், முதல் பாகம், மூன்றாம் பாகம் பின்னர் உருவாக்கும் எண்ணம் உள்ளது. படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கப்படும். இந்த படத்திற்கு பிறகு நானும் தனுஷூம் மீண்டும் ஒரு படத்தில் இணையத்தில் இணைய இருக்கிறோம். அது முற்றிலும் மாறுபட்ட கதை என்று இயக்குநர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











