அருண் விஜய் 31 ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா?

சென்னை : குற்றம் 23 படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் 31 மூலம் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகளுடன் நிறைவு பெற்றுள்ள இந்த படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா, ஸ்டெபி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதுவரை அருண் விஜய் 31 என அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மிரட்டலான போலீஸ் அதிகாரி

மிரட்டலான போலீஸ் அதிகாரி

ஈரம் ,வல்லினம்,ஆறாது சினம் என தொடர்ந்து திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக கால் தடத்தைப் பதித்த இயக்குனர் அறிவழகன் இயக்கிய குற்றம் 23 திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நடிகர் அருண் விஜய் மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிவழகன் 2017 ஆம் ஆண்டு வெளியான குற்றம் 23 படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருக்க தற்பொழுது மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து அருண் விஜய் 31வது படத்தை இயக்கியுள்ளார்.

ஆக்ஷன் திரைப்படமாக

ஆக்ஷன் திரைப்படமாக

திரில்லர் மற்றும் ஆக்ஷன் சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் ஸ்டெபி ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஏப்ரல் 15

ஏப்ரல் 15

இந்த நிலையில் அருண்விஜய் 31-வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது என்பது பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஏப்ரல் 14 டைட்டில் போஸ்டரும், ஏப்ரல் 15 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிறது. இதற்கான புரோமோ தற்போது வெளியானது அதில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X