Arun Vijay: நள்ளிரவில் மனைவியுடன் கிரிவலம்... திருவண்ணாமலையில் அருண் விஜய்யை சூழந்த ரசிகர்கள்!

திருவண்ணாமலை: முறை மாப்பிள்ளை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய்.

ஆரம்பத்தில் ஜொலிக்க முடியாத அருண் விஜய், செகண்ட் ரவுண்ட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார்.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கானில் நடித்து வரும் அருண் விஜய், அடுத்தடுத்து பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

 Arun Vijay: Actor Arun Vijay went to Girivalam in Tiruvannamalai with his wife

இந்நிலையில், திருவண்ணாமலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் கிரிவலம் சென்ற அருண் விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.

நள்ளிரவில் கிரிவலம் சென்ற அருண் விஜய்: மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனாக திரையுலகில் அறிமுகமானவர் அருண் விஜய். முறை மாப்பிள்ளை, ப்ரியம், காத்திருந்த காதல், கங்கா கெளரி, துள்ளி திரிந்த காலம், இயற்கை என ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்துள்ளார் அருண் விஜய். ஆனாலும், அவருக்கு முதல் ரவுண்டு பெரிதாக கை கொடுக்கவில்லை.

ஆனால், 2012ம் ஆண்டு வெளியான தடையறத் தாக்க திரைப்படம் அருண் விஜய்க்கு மாஸ் கம்பேக் கொடுத்தது. அடுத்து என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். அதன்பின்னர் அருண் விஜய் கேரியரில் சுக்ர திசை தான் அடித்தது எனலாம். குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், யானை திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.

இந்நிலையில், தற்போது இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அருண் விஜய். இதில் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் நடிப்பது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பாலா இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தவம் கிடக்கும் நிலையில், அருண் விஜய்க்கு இந்த ஜாக்பாட் தேடிச் சென்றுள்ளது. இதனால், வணங்கான் திரைப்படம் அருண் விஜய் கேரியரில் மிகப் பெரிய சக்சஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Arun Vijay: Actor Arun Vijay went to Girivalam in Tiruvannamalai with his wife

பாலாவின் வணங்கானை அதிகம் நம்பியுள்ள அருண் விஜய், இன்னொரு பக்கம் மிஷன் படத்தையும் எதிர்பார்த்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள மிஷன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் சக்சஸ்க்காக கிரிவலம் சென்றுள்ளார் அருண் விஜய்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய், தனது மனைவி ஆர்த்தியுடன் 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் சென்றார். நள்ளிரவில் அருண் விஜய் கிரிவலம் செல்வதை அறிந்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது கிரிவலப் பாதையில் உள்ள அருள்மிகு இடுக்கு பிள்ளையார் கோயிலிலும் அருண் விஜய் தரிசனம் செய்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X