அஜீத்துடன் மீண்டும் மோதப் போகும் அருண் விஜய் - மாஸ் காட்டுவாரா?

Recommended Video

Nerkonda Paarvai Public Opinion | Nerkonda Paarvai | Ajith Kumar | Shraddha Srinath | H Vinoth

சென்னை: அஜீத் அடுத்ததாக நடிக்கும் 60ஆவது படத்தில், வில்லனாக நடிக்கப்போவது என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மாஸ் காட்டிய அருண் விஜய் தான் என்பது தற்போது உறுதியாகி உள்ளது.

நடிகர் அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் அனைவரும் தல அஜீத்தை கொண்டாடி வருகின்றனர். அஜீத்தின் ரசிகர்களோ, தல வேற லெவலுக்கு போய்விட்டார் என்றே குதூகலிக்கின்றனர்.

Arun Vijay acts in Ajith Kumar’s 60th flim

இந்நிலையில் அஜீத் தற்போது தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். அடுத்தாக அவர் நடிக்கும் 60ஆவது படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கப்போவது உறுதியாகி உள்ளது. புதிய படத்திற்கான படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்கப்போவதும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் தான் இயக்கப்போகிறார். போனி கபூரின்-ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் முதன் முதலில் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைக்கப் போவது ஜிப்ரான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக இந்தப் படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் நடிக்கப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. பின்பு மெர்சல் படத்தில் தளபதி விஜயை தெறிக்கவிட்ட எஸ்.ஜே.சூர்யா நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. இருந்தாலும் அது பற்றி உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், அஜீத்தின் 60ஆவது படத்தில் வில்லனாக நடிக்கப்போவது நடிகர் அருண் விஜய் என்பது உறுதியாகியுள்ளது. அருண் விஜய் ஏற்கனவே அஜீத் உடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மாஸ் காட்டியிருந்தார். அந்த கேரக்டர் அஜித் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது.

அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாக கதாநாயகனாக பல படங்களில் நடித்திருந்தாலும் கூட, என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் இணைந்து மாறுபட்ட வில்லன் கேரக்டரில் நடித்த கதாபாத்திரம் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்தப் படத்தின் வெற்றிக்கு பின்னர், அவர் நடித்த படங்களுக்கும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அருண் விஜய் மீண்டும் அஜீத் உடன் வில்லனாக மோதப்போகிறார். இந்தப் படமும் என்னை அறிந்தால் படம் போலவே ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த கதைக் களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்தின் 60ஆவது படத்தில் ரேஸிங், சேஸிங், ஸ்போர்ட்ஸ் என அவருக்கு பிடித்தமான அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்தப் படம் முழுவதும் தென் ஆப்பிரிக்கா நாட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X