அரவிந்த்சாமி, அருண் விஜய்.... இவர்களா அஜீத்தின் வில்லன்கள்?
அஜீத்தின் அடுத்த படம் பற்றி எது உண்மை எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு செய்திகள்...
இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் செய்தி, அஜீத்துக்கு இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பவர்களைப் பற்றியது.
கவுதம் மேனன் படங்களில் ஹீரோவுக்கு சமமான ரோல்தான் வில்லன்களுக்கு என்பதால் முன்னணி ஹீரோக்கள் இருவரையே வில்லனாக்கிவிடத் தீர்மானித்து இருவரை அணுகியிருக்கிறார் கவுதம் மேனன்.

அரவிந்த் சாமி
அவர்களில் ஒருவர் அரவிந்த் சாமி. முன்னாள் சாக்லேட் பாய் ஹீரோ. இப்போது குணச்சித்திர நடிகர் ரேஞ்சுக்கு வந்துவிட்ட அரவிந்த் சாமிக்கு இந்ததப் படத்தில் முக்கிய வேடம் என்று கூறி வந்தனர். ஆனால் இதை அரவிந்த் சாமி கடுமையாக மறுத்துள்ளார். நானே சொல்லும் வரை எதுவும் உண்மை கிடையாது என்கிறார் அ சாமி!

அருண் விஜய்
அடுத்த வில்லன் அருண் விஜய். தடையறத் தாக்க படத்துக்குப் பிறகு, இப்போது டீல் படத்தில் நாயகனாக நடித்து வரும் அருண் விஜய்யை இன்னொரு வில்லனாக்கியிருக்கிறாராம் கவுதம். ஹீரோவாக இப்போதுதான் ஒரு ட்ராக்கைப் பிடித்திருக்கும் அருண் விஜய் எப்படிச் சம்மதித்தார் என்பதுதான் தெரியவில்லை.

இந்தி கதாசிரியர்
இதில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்கா. படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் கவுதம் மேனனோடு இணைந்து ஸ்ரீதர் ராகவன் பணியாற்ற இருக்கிறார். இவர் இந்தியில் பிரபல கதையாசிரியர்.

யார் இசை?
இந்தப் படத்துக்கு இசை யார் என்பதில் இன்னும் தெளிவான முடிவுக்கு வரவில்லையாம். இயக்குநரின் விருப்பம் ஹாரிஸ் ஜெயராஜ். தயாரிப்பாளரின் விருப்பமோ அனிருத். ஹாரிஸால் இதற்கு முன் தான் பட்ட கசப்பான அனுபவங்களை முழ நீளத்துக்கு பட்டியல் போடுகிறாராம் ரத்னம்.

மல்டி ஸ்டாரர்
இந்தப் படம் ஒரு பக்கா போலீஸ் கதை. அஜீத், அரவிந்த்சாமி, அருண் விஜய் மூவருமே கிட்டத்தட்ட ஹீரோக்கள் எனும் அளவுக்கு மல்டி ஸ்டார் படமாக வருகிறது இந்த பெயர் அறிவிக்கப்படாத படம்.


Click it and Unblock the Notifications











