Vanangaan: பாலா ரசிகர்களுக்கு ட்ரீட்! ராவான படம் பார்க்க தயாரா? ரிலீஸ் ஆகும் வணங்கான் ட்ரைலர்!
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம்தான். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகினார். அதன் பின்னர் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் சில பல காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த படத்தில் இணைந்தார் நடிகர் அருண் விஜய். தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தொடர்பாக அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இன்று வரைக்கும் இல்லாத ஒரு விஷயம் என்றால் அது பாலிவுட் சினிமாவில் இருக்கக்கூடிய வாரிசு அரசியல் எனப்படக்கூடிய நெபுடிசம். 80களில் மாபெரும் இயக்குநராக இருந்த எஸ்.ஏ. சந்திர சேகரின் மகன் விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உயர்ந்துள்ளார் என்றால் அது அவரது முயற்சியால்தான். தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் எனப்பட்ட பிரபு சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்ததற்கு காரணமும் அவருடைய திறமைதான்.

பாலிவுட் சினிமாவைப் போல் தமிழ் சினிமாவிலும் நெபுடிசம் இருந்திருந்தால், நாகேஷ் மகன் சினிமாவில் கோலோச்சியிருக்க முடியும், முரளி மகன் இன்னும் தடுமாறிக்கொண்டு இருக்கமாட்டார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் குடும்பத்தில் இருந்து வந்த ஜீவா இன்னும் மாறும் வெற்றிக்காக காத்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. இந்த வரிசையில்தான் இருக்கின்றார் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.
அருண் விஜய் 2000களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றார். கதாநாயகன், படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஆகியவற்றில் நடித்து வந்த அருண் விஜய்க்கு பெயர் சொல்லும் அளவிற்கான வெற்றி என்பது கிடைக்கவேயில்லை. ஆனால் அந்த வெற்றிக்காக இன்று வரை உழைத்துக்கொண்டு இருக்கின்றார். பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் அருண் விஜய் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு மிஷன் சாப்ட்டர் 1 படத்தினை ரிலீஸ் செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த படம்தான் இவரது நடிப்பில் வெளியாகும் முதல் விழாக்கால படம்.
தமிழ் சினிமாவில் இவருக்கு ஓரளவுக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது என்னை அறிந்தால் படம்தான். அந்த படத்தில் வில்லனாக நடித்து அஜித்துக்கு சவால் அளிக்கும் வகையில் நடித்திருப்பார். அதன் பின்னர் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வெளிவந்திருந்தாலும் இன்னும் மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் மற்றும் வசூலைக் குவித்த படம் என எதுவும் பதிவாகவில்லை.
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக உள்ள படம் வணங்கான். இந்த படத்தினை பாலா இயக்குகின்றார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகினார். அதன் பின்னர் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் சில பல காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த படத்தில் இணைந்தார் நடிகர் அருண் விஜய். தற்போது இந்தப் படத்தின் டரைலர் ரிலீஸ் தொடர்பாக அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுநாள் அதாவது ஜூலை 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை படக்குழு தரப்பில் இருந்து சில போஸ்டர்கள், டீசர் மட்டும் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் ட்ரைலர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகின்றது. இந்த படம் அருண் விஜய்யின் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என அருண் விஜய் மற்றும் விஜயகுமார் குடும்பத்தினர் நம்பிக்கையில் உள்ளனர். படம் ஆகஸ்ட் 15இல் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்ப்டுகின்றது. படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றார்.


Click it and Unblock the Notifications











