Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விக்டரை அஜித் ரசிகர்கள் எப்பவும் மறக்கமாட்டாங்க.. டிரெண்டாகும் ஹேப்பி பர்த்டே அருண்விஜய்!
Recommended Video
சென்னை: விடாமுயற்சி செய்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சினிமா துறையில் இருக்கும் எடுத்துக்காட்டாக அருண் விஜய் இருக்கிறார்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து ஹிட் கொடுத்து வரும் அருண் விஜய்யின் 42வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் விக்டராக கம்பேக்கான அருண் விஜய்யை என்றுமே மறக்காமல், இன்றும் அவரது பிறந்த நாளை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
இந்த நடிகரும் நடிகைகள வீட்டுக்கு அழைச்சுட்டு போக ஆரம்பிச்சுட்டாராம்! அவரு இடத்தை பிடிச்சுருவாரு போல!
|
ஹேப்பி பர்த்டே
நவம்பர் 19, 1977ம் ஆண்டு பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக அருண் விஜய் பிறந்தார். அருண் குமார் என தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்க்கு, ஆரம்ப கால படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. தற்போது அருண் விஜய் என தனது பெயரை மாற்றிக் கொண்டு கம்பேக் கொடுத்துள்ள அருண் விஜய்க்கு தொட்டதெல்லாம், அவரது கடின முயற்சியின் காரணமாக வெற்றியாக அமைந்து வருகிறது. வரும் வருடம் சிறப்பான வருடமாக இருக்க வாழ்த்துக்கள்.
|
டிரெண்டிங்
ஹேப்பி பர்த்டே அருண் விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அருண் விஜய்யின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நேற்று லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று அருண் விஜய்யின் பிறந்த நாள் டிரெண்டாகி வருகிறது. நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த மாதம் முழுவதும் பிரபலங்களின் பிறந்தநாள் மாதமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கொண்டாட்ட மாதமாக அமைந்துள்ளது.
|
மாஃபியா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஃபியா படத்தின் டப்பிங் அண்மையில் முடிந்துள்ளது. டிசம்பர் இறுதிக்குள் மாஃபியா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேப்பி பர்த்டே ஹேஷ்டேக் உடன் மாஃபியா ஹேஷ்டேகும் டிரெண்ட் ஆகிறது.
|
மணிரத்னம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில் தியாகுவாக நடித்து அருண் விஜய் அசத்தியிருந்தார். இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படமான சினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 5:05 மணிக்கு இயக்குநர் மணிரத்னம் வெளியிடுகிறார். சினம் படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கி வருகிறார்.
|
அஜித் ரசிகர்கள்
என்னை அறிந்தால் படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு, அஜித் ரசிகர்கள் தனக்கு கொடுத்த ரெஸ்பான்ஸை கண்டு கண் கலங்கிய படி வெளியே வந்த அருண் விஜய்யை இன்றளவும் அஜித் ரசிகர்கள் மறக்கவே இல்லை. என்னை அறிந்தால் விக்டர் கேரக்டர் புகைப்படங்களை பதிவிட்டு அஜித் ரசிகர்கள் அருண் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு