அருண் விஜய்யின் சில்வர் ஜூப்ளி.. சினம் ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை: சினம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், தனது திரை வாழ்க்கை பயணத்தின் 25வது ஆண்டை கேக் வெட்டி கொண்டாடினார் அருண் விஜய்.

அருண் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகிவிட்டார். வரிசையாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அருண் விஜய்யின் கிராப் தினம் தினம் உயர்ந்து கொண்டே போகிறது. அதன் பின் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம் படங்களில் இவர் நடித்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

 Arun Vijay celebrates 25th anniversary of his screen career

தற்பொழுது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார் அருண் விஜய். நவீனின் அக்னி சிறகுகள், அறிவழகன் உடன் ஒரு படம் என்று வரிசையாக நடித்து கொண்டு வருகிறார் அருண் விஜய். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்னி சிறகுகள் படத்தில் தான் நடித்து வரும் புகைப்படங்களை வெளியிட்டார். மேலும், இவர் நடித்த மாபியா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருகின்றது.

 Arun Vijay celebrates 25th anniversary of his screen career

ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜிஎன்ஆர் குமரவேல் அருண் விஜய்யை வைத்து இயக்கி வரும் சினம் படத்தின் மூன்றாவது ஷெட்யூல் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் அவர் சப் இன்ஸ்பெக்டர் ஆக நடித்து வருகிறார்.

 Arun Vijay celebrates 25th anniversary of his screen career

இதனிடையே அருண் விஜய் திரையில் கால்பதித்து 25வது ஆண்டை எட்டியுள்ளது இதனை கொண்டாடும் வகையில் மாபியா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது ரசிகர்கள் அவரை கௌரவப்படுத்தினர். தற்போது சினம் படத்தில் நடித்து வரும் அருண்விஜய் அங்கு மீண்டும் தனது திரை பயணத்தின் 25வது ஆண்டை சினம் படக்குழுவினருடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X