ரோட்டோரக் கடையில் ஆம்லெட் மாஸ்டரான அருண் விஜய்: வைரல் போட்டோ
Recommended Video

நடிகர் அருண் விஜய் கைவசம் வேறு தொழிலும் உள்ளது- வீடியோ
சென்னை: நடிகர் அருண் விஜய் கைவசம் வேறு தொழிலும் உள்ளது.
என்னை அறிந்தால் படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்தது. தற்போது அவர் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு தளத்தில் அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அருண் விஜய் ரோட்டோரக்கடையில் ஆம்லெட் சமைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சென்னைக்கு வரும் வழியில் உள்ள ரோட்டோரக் கடை ஒன்றில் காலை உணவுக்காக கடலையை பொடியாக்கிப் போட்டு வெள்ளைக்கருவால் ஆன ஆம்லெட்டை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











