அந்த மனசு தான் சார் கடவுள்.. அருண் விஜய் யாருடன் பிறந்தநாள் கொண்டாடி இருக்காருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் அருண் விஜய் தனது 45வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார். பின்ன்ர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று தனது பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.
மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் பலருக்கு முன்னுதாரணமாக மாற்றியுள்ளார்.

அருண் விஜய் பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை பலருக்கும் பயனுள்ள வகையில் கொண்டாடி உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வழக்கம் போல ஒவ்வொரு பிறந்தநாள் அதுவும் ரத்த தானம் செய்வது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குவது என தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார்.

அறிமுகம்
1977ம் ஆண்டு நடிகர் விஜயகுமார் மற்றும் முத்துக்கண்ணு தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அருண் விஜய். 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தி உள்ளார் அருண் விஜய்.

இந்த ஆண்டு
தனது அப்பா மற்றும் மகனுடன் இணைந்து ஓ மை டாக் படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு வெளியான அந்த படம் குழந்தைகளின் ஃபேவரைட் படமாக மாறியது. யானை, சினம் உள்ளிட்ட படங்களும், ஓடிடியில் தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் இந்த ஆண்டு நடித்து இருந்தார் அருண் விஜய்.

ஆதரவற்றோர் இல்லத்தில்
நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2022 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அங்கே குழந்தைகளுடன் அருண் விஜய் அமர்ந்து உணவு உண்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரத்த தானம்
அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் ரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. மக்கள் பலரும் அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











