Vanangaan: வணங்கான் படத்தினைப் பார்த்த அருண் விஜய் குடும்பம்.. கண்ணீர் சிந்திய விஜயகுமார்!
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம்தான். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகினார். அதன் பின்னர் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் சில பல காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த படத்தில் இணைந்தார் நடிகர் அருண் விஜய். தற்போது இந்தப் படத்தினை அருண் விஜய் குடும்பத்தினர் பார்த்துவிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இன்று வரைக்கும் இல்லாத ஒரு விஷயம் என்றால் அது பாலிவுட் சினிமாவில் இருக்கக்கூடிய வாரிசு அரசியல் எனப்படக்கூடிய நெபுடிசம் தான். மாபெறும் இயக்குநராக இருந்த எஸ்.ஏ. சந்திர சேகரின் மகன் விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உயர பெரும் உழைப்பினைச் செலுத்தியதால்தான் சாத்தியமானது. இறந்த பின்னரும் கொண்டாடப்படும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சினிமாவில் கோலோச்ச இப்போதுவரை முயற்சி செய்துகொண்டுதான் உள்ளார்.

இந்தி சினிமா உலகைப்போல் தமிழ் சினிமாவிலும் நெபுடிசம் இருந்திருந்தால், மறைந்த மாபெரும் நடிகர் நாகேஷ் மகன் சினிமாவில் கோலோச்சியிருக்க முடியும், மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா இன்னும் மாபெரும் ஹிட்டுக்காகவும், மாபெரும் பேனருக்காகவும் காத்துக் கொண்டு இருக்கவேண்டியதில்லை. அறிமுகமானபோது பெரும் கவனத்தினை ஈர்த்த பிரபுவின், மகன் விக்ரம் பிரபு இப்போதுவரை பெரிய லைம் லைட்டுக்காக காத்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.
அருண் விஜய் 2000களில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தான் கமிட் ஆன படங்களில் முடிந்தவரை நல்ல நடிப்பினையே வெளிப்படுத்தி வந்துள்ளார். படம் தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகின்றதோ அதைவைத்து வெற்றியைத் தீர்மானித்த காலத்தில் இருந்து, இப்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தான் வெற்றி என்ற இடத்திற்கு நகர்ந்த பின்னரும்கூட, அருண் விஜய்க்கு பெரும் வெற்றிப் படம் என வரிசையாக அமையவில்லை.
பெரும் அங்கீகாரம்: அதேநேரத்தில் இவரது நடிப்பில் அவ்வப்போது வெற்றிப் படங்களும் வந்துள்ளது. நடிப்பிலும் பெரும் பாராட்டினைப் பெற்ற படங்களும் இவருக்கு அமையாமல் இல்லை. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மாஸான வில்லனாக நடித்து ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் பாரட்டினைப் பெற்றார்.
ரிலீஸ்: அருண் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வணங்கான். இந்த படத்தினை பாலா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி, சில காரணங்களால் வெளியேறினார். சூர்யா விலகியதே வணங்கான் படத்திற்கு பெரும் பப்ளிசிட்டியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. சூர்யா விலகிய பின்னர் அருண் விஜய் வணங்கான் படத்தில் இணைந்தார். பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் அருண் காமாட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
கண்ணீர்: இப்படியான நிலையில் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள ஒரு ப்ரீவ்யூ தியேட்டரில் வணங்கான் படத்தினை அருண் விஜய் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். படத்தினைப் பார்த்த அருண் விஜய் குடும்பத்தினர் அருண் விஜய்யின் நடிப்பினைப் பார்த்து பிரமித்துப் போயுள்ளனர்.மேலும் கண்ணீர் சிந்தி அருண் விஜய்யை கட்டிப் பிடித்துப் பாராட்டியும் உள்ளனர். படம் எப்போது வெளியானாலும் தமிழ்சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











