twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்ல பிரமோ... அடுத்தது பாடல்... யானை படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

    |

    சென்னை : நடிகர் அருண் விஜய் -இயக்குநர் ஹரி காம்போவில் உருவாகியுள்ள படம் யானை.

    சூர்யாவை வைத்து சிங்கத்தை களமிறக்கிய ஹரி தற்போது யானையை கையில் எடுத்துள்ளார்.

    இந்தப் படத்தின் பாடல் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     கண்டிப்பாக எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. புத்தம் புது காலை விடியாதா.. நதியா பூரிப்பு! கண்டிப்பாக எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. புத்தம் புது காலை விடியாதா.. நதியா பூரிப்பு!

    யானை படம்

    யானை படம்

    நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் யானை. அவரது மைத்துனர் ஹரியின் டைரக்ஷனில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

    முதல்முறையாக கூட்டணி

    முதல்முறையாக கூட்டணி

    சூர்யாவின் நடிப்பில் வெளியான சிங்கம் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது யானை படம் மூலம் களமிறங்கியுள்ளார் இயக்குநர் ஹரி. முதல்முறையாக அருண் விஜய் -ஹரி காம்பினேஷனில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

    வெற்றிக்கான கட்டாயம்

    வெற்றிக்கான கட்டாயம்

    சிறப்பான திரைக்கதையுடன் களமிறங்கும் இயக்குநர் ஹரியின் கடைசி படங்களான சிங்கம் 3 மற்றும், சாமி 2 ஆகிய படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது கட்டாய வெற்றியை கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளார் ஹரி. அதனால் யானை படத்தை மிகுந்த கவனத்துடன் அவர் இயக்கியுள்ளார்.

    பிரியா பவானி சங்கர் நாயகி

    பிரியா பவானி சங்கர் நாயகி

    படத்தில் அருண் விஜய்க்கு நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் நாளைய தினம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் பாடலின் பிரமோவை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

    ரிலீசுக்கு தயாராகும் படம்

    ரிலீசுக்கு தயாராகும் படம்

    டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது ரிலீசுக்கு படம் தயாராகி வருகிறது. இதனையொட்டியே தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. பொங்கலை முன்னிட்டு பாடல் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

    English summary
    Yaanai movie first single released tomorrow
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X